கம்பராமாயணம் 10315 · யுத்த 37.302

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காலின்மா மதலை சொல்ல, பரதனும் கண்ணீர் சோர,
வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்ட கொண்ட
நீல மா முகில்பின் போனான் ஒருவன்; நான் நின்று நைவேன்
போலுமால்; இவைகள் கேட்பேன்; புகழுடைத்து, அடிமை மன்னோ.

பொருள் · Meaning in Tamil

காலின் மாமதலை சொல்ல - காற்றின் மகனாய அனுமான் சொல்ல; பரதனும் கண்ணீர் சோர - (அது கேட்டு) பரதனும் கண்ணீர் சொரிய நின்று; வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்டம் கொண்ட - நீர் வேலியுடைய மதில் சுற்றிய இலங்கையில் வேட்டையாட விரும்பிய; நீல மாமுகில்பின் ஒருவன் போனான் - நீலமேகமாய இராமன் பின்னால் இலக்குவன் சென்றான்; நான் நின்று நைவேன் போலும் - நான் இங்கிருந்து வருந்துவேன் போலும்; இவைகள் கேட்பேன் - இச்செய்திகளைக் கேட்பவனாகவே ஆனேன்; அடிமை புகழ் உடைத்து - நான் இராமற்குச் செய்த அடிமை புகழ் உடையது என்று வருந்திக் கூறினான்.

ஆல் - உரையசை மன், ஓ அசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the great son of the Wind told this, Paratan, tears streaming, said:
  2. “Behind the great dark cloud who went hunting in Ilaṅkai, ringed by its moated walls,
  3. one man went; and I, it seems, was to stay here and waste away,
  4. and only hear of these things. Fine fame indeed my service has!”

What the poem says

Hearing all that Irāmaṉ had suffered and achieved, Paratan weeps and reproaches himself. Ilakkuvaṉ followed Irāmaṉ into the "hunt" for Irāvaṇaṉ; Paratan stayed behind and can only listen to the story. His closing words are bitter irony: what glory is there in such service to his brother?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāliṉ mā matalai colla, parataṉum kaṇṇīr cōra,
vēli mā matilkaḷ cūḻum ilaṅkaiyil vēṭṭam koṇṭa
nīla mā mukil piṉ pōṉāṉ oruvaṉ; nāṉ niṉṟu naivēṉ
pōlumāl; ivaikaḷ kēṭpēṉ; pukaḻ uṭaittu, aṭimai maṉṉō.