கம்பராமாயணம் 10316 · யுத்த 37.303

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று அவன் இரங்கி ஏங்கி, இருகணும் அருவி சோர
வன்திறல் அனுமன் செங்கை வலக்கையால் பற்றி, காலின்
சென்றனன் இருளின் ஊடு, செறிபுனல் கங்கை சேர்ந்தான்
குன்றினை வலஞ்செய் தேரான் குணகடல் தோன்றும் முன்னர்.

பொருள் · Meaning in Tamil

அவன் - அப்பரதன்; என்று இரங்கி ஏங்கி - இவ்வாறு கூறி அழுது வருந்தி: இருகணும் அருவி சோர - இரண்டு கண்களிலிருந்தும் கண்ணீர் அருவியாய்ச் சொரியுமாறு; வன்திறல் அனுமன் செங்கை - வலிமை மிக்க அனுமனது சீரிய கையை; வலக்கையால் பற்றி - தனது வலது கையினால் பிடித்துக் கொண்டு; இருளின் ஊடு காலின் சென்றனன் - இருளின் இடையே காலால் நடந்து சென்று; குன்றினை வலம் செய்தேரோன் - மேருமலையை வலமாகச் சுற்றி வருகின்ற தேரினை உடைய சூரியன்; குணகடல் தோன்று முன்னர் - கீழ்க்கடலில் உதயமாவதற்கு முன்னாலே; செறிபுனல் கங்கை சேர்ந்தான் - நீர் நிறைந்த கங்கைக் கரையை அடைந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So he grieved and sighed, both eyes pouring like waterfalls,
  2. and taking the red hand of mighty Aṉumaṉ in his right hand, on foot
  3. he went through the darkness and reached the Kaṅkai full of water
  4. before the one whose chariot circles the mountain rose from the eastern sea.

What the poem says

Still weeping, Paratan takes Aṉumaṉ by the hand and sets out at once, walking through the night. He reaches the bank of the Gaṅgā before dawn, before the Sun, whose chariot circles Mount Mēru, comes up out of the eastern ocean.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu avaṉ iraṅki ēṅki, iru kaṇum aruvi cōra
vaṉ tiṟal aṉumaṉ ceṅ kai valak kaiyāl paṟṟi, kāliṉ
ceṉṟaṉaṉ iruḷiṉ ūṭu, ceṟi puṉal kaṅkai cērntāṉ
kuṉṟiṉai valañ cey tērōṉ kuṇa kaṭal tōṉṟum muṉṉar.