கம்பராமாயணம் 10317 · யுத்த 37.304

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எம்பிரான் - எமது தலைவனாகிய இராமபிரான்; இராவணன் வேட்டம் போய் மீண்டு - இராவணனை வேட்டையாடிக் கொல்லுவதற்காக இலங்கை சென்று திரும்பி வந்து; தராதல மகளும் பூவின் தையலும் மகிழ - பூமி என்கின்ற பெண்ணும், தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் மகிழ்ச்சி அடையும்படி; சூடும் - அணிந்து கொள்கின்ற; அராவு பொன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி - அராவிச் செய்யப் பெற்ற பொன்னால் ஆகிய மகுடத்துக்குப் பொருந்திய உச்சி மணியை; குணபால் அண்ணல் - கீழ்த்திசைக் காவலன் ஆகிய இந்திரன்; விராவுற எடுத்தால் என்ன - பொருத்தமுறத் தோன்றும்படி மேலே தூக்கிப் பிடித்தாற் போல என்னுமாறு; வெய்யவன் உதயம் செய்தான் - சூரியன் கீழ்த்திசையில் தோன்றினான்.

இராவண வதத்தால் பெருநலம் பெற்றவன் இந்திரன் ஆதலின் அவன் இராமன் மகுடத்துக்குப் பொருந்திய சிரோரதனத்தைத் தன் திசைக்கண்ணே தோற்றுவித்தது போன்றது சூரியோதயம் ஆகும். இயற்கையான சூரிய உதயத்தைக் கற்பனை செய்தலின் தற்குறிப்பேற்ற உவமையணியாகும். சிகாமணி - சிரோரதனம். இராமன் தன்னை ஆளப் போதலால் பூதேவி மகிழ்ந்தாளாம் - துன்பங்கள் நீங்கி நன்மை பெறுதலால் சீதேவி மகிழ்ந்தாளாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if, now that our lord had gone on his hunt for Irāvaṇaṉ, returned and was coming to Ayōttī,
  2. the lord of the east were holding up, to fit it closely,
  3. the crest-jewel matching the filed golden crown he would wear
  4. to the delight of the Earth-maiden and the lady of the flower, the hot-rayed Sun rose.

What the poem says

Dawn breaks as Paratan reaches the Gaṅgā. The poet imagines the rising sun as the crest-jewel of Irāmaṉ's coronation crown, held up in the east by Intiraṉ, guardian of that quarter, who gained most from Irāvaṇaṉ's death. This is a fanciful attribution of cause to a natural event (taṟkuṟippēṟṟam).

The Earth goddess rejoices because Irāmaṉ will now rule her; Lakṣmī, the lady of the lotus, rejoices because sorrow is ended and prosperity returns.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1irāvaṇaṉ vēṭṭam pōy mīṇṭu, empirāṉ, ayōtti eyti
tarātala makaḷum pūviṉ taiyalum makiḻac cūṭum
arāvu poṉ maulikku ēynta cikāmaṇi kuṇapāl aṇṇal
virāvuṟa eṭuttāl eṉṉa veyyavaṉ utayam ceytāṉ.