கம்பராமாயணம் 10319 · யுத்த 37.306
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வீர! - வீரனாகிய அனுமனே! எழுபது வெள்ளம் சேனை வானரர் - எழுபது வெள்ளக் கணக்கான சேனைகளாகிய வானரர்கள்; இலங்கை வேந்தன் முழுமுதல் சேனை வெள்ளம் - இலங்கையரசனாகிய வீடணனது அளவிறந்த சேனைக் கூட்டம்; கணக்கு இல மொய்த்த என்றால் - கணக்கில்லாதன ஒன்று சேர்ந்து நெருங்கி விட்டன என்றால்; அழுவ நீர் வேலை சுற்றும் அரவம் இன்றாக வற்றோ - ஆழமான நீர்ப்பரப்பான கடலின் கண் சுற்றுகின்ற பேரொலி போன்ற பேர் ஆரவாரம் இல்லாமல் இருக்க இயலுமா? (அவ்வொலி ஏதும் இல்லாமையால்); எம்பிரான் வந்தான் என்று உரைத்தது விழுமிது - இராமபிரான் வந்து விட்டான் என்று நீ கூறியது நன்றாயிருக்கிறது; என்றான்.
'விழுமிது' என்னும் சொல் இகழ்ச்சிக் குறிப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “If seventy floods of monkey troops, and the whole
- great army of the king of Ilaṅkai, beyond counting, have crowded here,
- could they be without a roar like that which rings round the deep sea?
- A fine thing, your saying ‘Our lord has come’, hero!” he said.
What the poem says
Paratan explains his doubt. An army of such size camped nearby would make a noise like the ocean, yet he hears nothing. So Aṉumaṉ's news that Irāmaṉ has arrived must be wrong. "A fine thing" is said with an edge of irony.