கம்பராமாயணம் 10320 · யுத்த 37.307

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘ஓசனை இரண்டே உள்ள, பரத்துவன் உறையுஞ் சோலை;
வீசுதெண் திரையிற்று ஆய வெள்ளமோர் ஏழு பத்தும்
மூசிய பழுவம் இங்ஙன் கிடப்பதோ, முரற்றல் இன்றி?
பேசியது அமையும்; நம்கோன் எங்குளன், பெரும! ‘என்றான்.

பொருள் · Meaning in Tamil

பெரும! - அனுமனே! பரத்துவன் உறையும் சோலை - பரத்துவாச முனிவனது ஆசிரமச் சோலை (இங்கிருந்து); இரண்டு ஓசனை உண்டு அன்றே - இரண்டு யோசனை தூரத்தின் கண் உள்ளது அல்லவா? (அவ்வாறாயின்); வீசு தெண் திரையிற்று ஆய வெள்ளம் ஓர் ஏழுபத்தும் - அலை வீசும் கடற்பரப்பைப் போலக் கணக்கிடத் தக்க எழுபது வெள்ளமாகிய சேனைகளும்; மூசிய பழுவம் - நெருங்கக் கிடக்கின்ற அச்சோலைக் காடு; முரற்றல் இன்றி இங்ஙன் கிடப்பதோ? - (நம் காதில் கேட்கும்படி) ஒலி செய்யாமல் அமைதியாக இவ்வாறும் இருக்க இயலுமா?; பேசியது அமையும் - நீ இதுவரை கூறியது மிக நன்றாய் இருந்தது (இனியும் அதை நீட்ட வேண்டா); நம் கோன் எங்கு உளன் - நம் தலைவனாய இராமபிரான் எங்கே இருக்கின்றான்; என்றான்.

'பேசியது அமையும்' என்பது இகழ்ச்சிக் குறிப்பு. இவ்வளவு ஐயத்திலும் அனுமனைப் பெரும! வீர! என்று விளித்தது பரதனது பண்பு நலத்தைக் காட்டும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Is not the grove where Parattuvaṉ dwells two leagues away?
  2. Could the forest, where seventy floods of troops like the sea with its clear tossing waves
  3. are swarming, lie like this without a murmur?
  4. Enough of what you have said. Where is our king, great one?” he said.

What the poem says

Paratan presses the point: the sage's grove is only two yōjanas off, and an army as vast as the sea could not lie there in silence. "Enough of what you have said" is pointed, yet even in his suspicion he still addresses Aṉumaṉ courteously as "great one" and "hero", which shows his fine nature.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ōcaṉai iraṇṭu uṇṭu aṉṟē, parattuvaṉ uṟaiyum cōlai;
vīcu teṇ tiraiyiṟṟu āya veḷḷam ōr ēḻu pattum
mūciya paḻuvam iṅṅaṉ kiṭappatō, muraṟṟal iṉṟi?
pēciyatu amaiyum; nam kōṉ eṅku uḷaṉ, peruma! ‘eṉṟāṉ.