கம்பராமாயணம் 10321 · யுத்த 37.308

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பரதன் அஃது உரைத்தலோடும் பணிந்து மாருதியும் சீர்சால்
விரத மாதவத்து மிக்கோய்! விண்ணுளோர் தம்மை வேண்டி
வரதன் ஆண்டு அளித்த அந்த வரத்தினால், மலரும் தேனும்
சரதமே மாந்தி மாந்தித் துயின்றது தானை என்றான்

பொருள் · Meaning in Tamil

பரதன் அஃது உரைத்தலோடும் - பரதன் அவ்வாறு சொல்லி முடித்த அளவில், மாருதியும் பணிந்து - அனுமனும் (பரதனை) வணங்கி; சீர் சால் விரத மாதவத்து மிக்கோய்! - புகழ் பொருந்திய நோன்பினால் உயர்ந்த பெருந்தவத்தில் சிறந்த பெரியோய்; வரதன் விண்ணவர் தமையும் வேண்டி ஆண்டு அளிப்ப வந்த வரத்தினால் - வரந்தரவல்ல பரத்துவாசன் தேவர்களை வழிபட்டு ஓர் ஆகுதியை வேள்விக்கண் அளிப்ப அதனாற் பெற்ற வரத்தின் மேன்மையால், தானை எல்லாம் - சேனைகள் எல்லாம்; மலரும் தேனும் சரதமே மாந்தி மாந்தித் துயின்றது - மலரையும் தேனையும் மிகுதியாகப் பெற்று நன்கு உண்டு மயங்கி அயர்ந்து துயின்று விட்டது (அதனால் ஒலி இல்லை) தொடரும்.

சேனை எல்லாம் - தொகுதியொருமை. துயின்றது என முடிந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As soon as Paratan had said this, Māruti bowed and said: “You who excel in great austerity
  2. and in vows of glorious worth! By the boon that came when the giver of boons there
  3. entreated the gods themselves and offered to them,
  4. the whole army has truly feasted again and again on flowers and honey, and fallen asleep.”

What the poem says

Aṉumaṉ answers respectfully. The sage Parattuvāca, able to grant boons, prayed to the gods and made an offering, and the grove filled with flowers, honey and food. The monkeys have eaten their fill and are fast asleep, which is why there is no sound. The sentence runs on into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1parataṉ aḵtu uraittalōṭum paṇintu mārutiyum cīr cāl
virata mā tavattu mikkōy! viṇṇavar tamaiyum vēṇṭi
varataṉ āṇṭu aḷippa vanta varattiṉāl, malarum tēṉum
caratamē mānti māntit tuyiṉṟatu tāṉai ellām.