கம்பராமாயணம் 10322 · யுத்த 37.309
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எந்தாய்! - என் தந்தைக்கு ஒப்பான பரதனே!; வானவர் கொடுக்க வந்த வரத்தினால் - தேவர்கள் அளிக்க உண்டாகிய வரபலத்தாலே; கானகம் - காடு; மதுபம் மூசும் தேனொடு கிழங்கும் காயும் கனிகளும் பிறவும் சீர்த்துப் பொலிதலாலே - வண்டுகள் மொய்க்கின்ற தேனோடு கிழங்கு, காய், பழம், பிற ஆகியவற்றால் வளம் பெற்று விளங்குவதால்; கவிக்குலம் அவற்றை மாந்தி - குரங்குக் கூட்டம் அவைகளை உண்டு மயங்கி, ஆனனம் மலர்ந்தது இல்லையாகும் - முகம் கண் விழிக்காமல் உறங்கியவாகும்; நீ துயரல் - (இராமன் வந்தானில்லையோ என்று கருதி) நீ வருந்தாதே. தொடரும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Through the boon that came as the gods bestowed it, the forest
- has grown rich with honey swarmed by bees, with roots and green fruit,
- ripe fruit and other things; the monkey host has gorged on them,
- and their faces have not yet opened from sleep. Do not grieve, my father!”
What the poem says
Aṉumaṉ goes on: by the gods' gift the forest overflows with honey, roots and fruit, and the monkeys, having eaten their fill, are still sleeping. Paratan should not grieve that Irāmaṉ has not come. He calls Paratan "my father" out of reverence.