கம்பராமாயணம் 10323 · யுத்த 37.310
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இனி ஒரு கணத்தின் - இனிமேல் ஒரு கணப் பொழுதிற்குள்; எம் கோன் எழுந்தருள் தன்மை - இராமபிரான் இங்கே எழுந்தருளப் போகின்ற பாங்கினை; ஈண்டு - இவ்விடத்தே; பனிவரும் கண்ணின் நீயே பார்த்தி என்று உரைத்தான் - நீர் பெருகுகின்ற கண்களை உடைய நீயே பார்ப்பாய் என்று சொல்லி முடித்தான்; இப்பால் - இன்னொரு புறமாகிய (பரத்துவாச ஆசிரமத்தே); முனிவனது இடத்தே வந்த முளரியம் கண்ணன் வண்ணக் குனிசிலைக் குரிசில் - பரத்துவாச ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்த தாமரைக் கண்ணனாகிய அழகிய வளைந்த வில்லை உடைய இராமபிரான்; செய்தது இற்று எனக் குணிக்கல் உற்றாம் - செய்த செயல் இது என்று சொல்லத் தொடங்கினோம்.
இது கவிக்கூற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “In a moment from now, how our lord comes here
- you will see for yourself, with your tear-filled eyes,” he said. Meanwhile,
- what the lotus-eyed one, the prince of the beautiful bent bow,
- who had come to the sage's dwelling, did — that we now set out to tell.
What the poem says
Aṉumaṉ assures Paratan that within moments he will see Irāmaṉ arrive with his own eyes. Then the poet speaks in his own voice and turns the story back to Irāmaṉ, who is still at the hermitage of Parattuvāca.