கம்பராமாயணம் 10324 · யுத்த 37.311
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அருந்தவன் ஆறு சுவைகளோடு அமுது இனிது அளிப்ப - பரத்துவாசன் அறுசுவைகளோடு கூடிய உணவினை நன்றாகக் கொடுக்க; ஐயன் கருந்தடங் கண்ணியோடும் களைகணாம் துணைவரோடும் விருந்து இனிது அருந்தி நின்ற வேலையின் - இராமபிரான் சீதாபிராட்டியோடு துன்பத்திற்குத் துணையாகிய சுக்கிரீவ விபீடண ஆதியாகிய சகோதரர்களோடும் விருந்தினை நன்கு அருந்தியிருந்த சமயத்தில்; கிராதர் கோன் - வேடர் வேந்தனாய குகன்; வேலை போலும் பெருந்தடந் தானையோடும் பெயர்ந்து வந்தான் - கடல் போன்ற தனது பெரிய அகன்ற வேடச் சேனையோடும் (சிருங்கிபேரத்திருந்து) புறப்பட்டு அங்கு வந்து சேர்ந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the great ascetic served a feast of the six tastes, and the lord,
- with the lady of large dark eyes and with the companions who were his refuge,
- was enjoying that hospitality, then, with an army
- vast and wide like the sea, the king of the hunters set out and came.
What the poem says
At the hermitage, Parattuvāca serves Irāmaṉ, Cītai and their allies a feast of all six tastes. While they are dining, Kukaṉ, chief of the forest hunters, who ferried Irāmaṉ across the Gaṅgā at the start of his exile, arrives from Śṛṅgivērapuram with his huge army of hunters.