கம்பராமாயணம் 10325 · யுத்த 37.312
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(குகன் இராமனைக் கண்டு) தொழுதனன் - கும்பிட்டான்; மனமும் கண்ணும் துளங்கினன் - மனமும் கண்களும் தடுமாறப் பெற்றான்; சூழ ஓடி அழுதனன் - இராமனைச் சுற்றி ஓடி அழுதான்; கமலம் அன்ன அடித்தலம் அதனின் வீழ்ந்தான் - தாமரை மலர் போன்ற இராமனது திருவடியிணையின்கண் விழுந்தான்; மார்பில் தம்பியைத் தழுவுமாபோல் - இராமன் மார்பின் கண்ணே தம்பியைத் தழுவிக் கொள்வது போலத்; தழுவினன் எடுத்து - தழுவித்தூக்கி; மக்களும் மனையும் வழுவிலர் வலியர் அன்றோ? - உன் மக்களும், குடும்பத்தினரும் தீங்கின்றி வலியராக உள்ளனரல்லவா?; என்றான் - என்று விசாரித்தான்.
தொழுது, துளங்கி, ஓடி, அழுது, விழுந்தான் என எச்சமாக்கி முடிவன முற்றாதல் 'பாவம்' நோக்கி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He worshipped; heart and eyes trembled; he ran all around him
- and wept; he fell at the feet that were like lotuses.
- The lord lifted him and held him to his breast, as one embraces a younger brother,
- and said, “Are your children and your household free from harm and strong?”
What the poem says
Kukaṉ, overwhelmed at seeing Irāmaṉ again, salutes him, trembles, runs round him weeping and falls at his feet. Irāmaṉ raises him and embraces him like a brother, then asks warmly after his family.
The string of finite verbs, rather than a smooth chain of participles, conveys Kukaṉ's agitated emotion.