கம்பராமாயணம் 10327 · யுத்த 37.314
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆயன பிறவும் பன்னி - இவ்வாறான வார்த்தைகள் பலவற்றையும் திரும்பப் பலமுறை சொல்லி; அழுங்குவான் தன்னை - வருந்துகின்ற குகனைப் பார்த்து (இராமபிரான்); ஐய! நீ இவை உரைப்பது என்னோ! - குகனே! நீ இத்தகைய வார்த்தைகளைக் கூறல் வேண்டுமா?; பரதனின் நீ வேறு உண்டோ - பரதனும் நீயும் எனக்கு ஒன்றல்லவா; போய் இனிது இருத்தி - சென்று நன்கு இருப்பாயாக; என்ன - என்று சொல்லி அனுப்ப; புளிஞர் கோன் - வேடர் தலைவனாய குகன்; இளவல் பொன் தாள் மேயினன் வணங்கி - இலக்குவனது பொலிவு பெற்ற திருவடிகளை விருப்பத்தோடு வழிபட்டு; அன்னை விரைமலர்த்தாளின் வீழ்ந்தான் - சீதாபிராட்டியினது மணம் நாறும் மலர்போன்ற திருவடிகளில் விழுந்து வணங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To him, grieving and repeating these words and others, the lord said: “Friend,
- why do you say these things? Are you any different from Paratan?
- Go, and be at ease.” Then the king of the hunters came to the golden feet of the younger brother
- and bowed, and fell at the fragrant flower-feet of the mother.
What the poem says
Irāmaṉ comforts Kukaṉ: he is as dear to him as his own brother Paratan, and need not reproach himself. Kukaṉ then pays his respects to Ilakkuvaṉ and falls at the feet of Cītai, whom he reveres as a mother.