கம்பராமாயணம் 10329 · யுத்த 37.316

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அண்ணல் அஃது உரைத்தலோடும், அரிக்குலது அரசன் ஆதி
நண்ணிய துணைவர் யாரும் இனிதுறத் தழுவி, நட்டார்
கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல
வண்ணமால் வரைக்கும் அப்பால் மறைந்தனன், இரவி என்பான்.

பொருள் · Meaning in Tamil

அண்ணல் அஃது உரைத்தலோடும் - இராமபிரான் அவ்வாறு (குகனை அறிமுகம் செய்து) கூறிய அளவில்; அரி குலத்து அரசன் ஆதி - குரங்குக் குலத்துக்கு அரசனாகிய சுக்ரீவன் முதலாக; நண்ணிய துணைவர் யாரும் - வீடணன் முதலிய துணைவர்கள் எல்லாரும்; இனிதுறத் தழுவி நட்டார் - இனிமை பொருந்த மனத்தாலும் உடலாலும் தழுவி நண்பு செய்தார்கள்; (இந்நிலையில்) கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல - இடமகன்ற உலகம் எல்லாம் இருளால் மூடுகின்றவனைப் போல; இரவி என்பான் - சூரியன் என்பவன்; வண்ண மால் வரைக்கும் அப்பால் மறைந்தனன் - அழகிய பெரிய மேரு மலைக்கும் பின்னால் மறையச் சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As soon as the noble one said this, the king of the monkey race and all
  2. the companions gathered there embraced him warmly and made friends with him;
  3. and as if to wrap the whole wide world in night,
  4. the one called Iravi went down beyond the great bright mountain.

What the poem says

After the introduction, Cukkirīvaṉ, Vīṭaṇaṉ and the rest embrace Kukaṉ and take him as a friend. Then the sun sets behind the great mountain, as though deliberately covering the world in darkness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṇal aḵtu uraittalōṭum, arik kulattu aracaṉ āti
naṇṇiya tuṇaivar yārum iṉitu uṟat taḻuvi, naṭṭār
kaṇṇakal ñālam ellām kaṅkulāl potivāṉ pōla
vaṇṇa māl varaikkum ap pāl maṟaintaṉaṉ, iravi eṉpāṉ.