கம்பராமாயணம் 10330 · யுத்த 37.317
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அலங்கல் அம் தொடையினானும் - அசைகின்ற அழகிய மாலையை அணிந்த இராமபிரானும்; அந்தியில் கடன்கள் ஆற்றி - மாலைக்காலத்தே செய்யும் நீர்க்கடன்களை நிறைவேற்றி; பொலங்குழை மயிலினோடு துயிலுற - பொன்னாலாய காதணி அணிந்த மயில்போலும் சீதையோடு உறங்க; புணரிபோலும் இலங்கிய சேனை சூழ - கடல் சூழப் பரந்து விளங்கும் சேனை சுற்றியிருப்ப; இளவலும் எயினர் கோனும் கலங்கலர் காத்து நின்றார் - இலக்குவனும் குகனும் சிறிதும் உறக்கத்தால் கலங்காதவராய்க் காவல் செய்து இருந்தார் (இந்நிலையில்); கதிரவன் உதயம் செய்தான் - சூரியன் தோன்றினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He of the swaying beautiful garland performed the rites of evening
- and slept beside the peacock with golden earrings; with the army
- gleaming like the sea all around, the younger brother and the king of the hunters
- stood guard, unwavering; and the Sun rose.
What the poem says
The night at the hermitage: Irāmaṉ performs his evening rites and sleeps beside Cītai, while Ilakkuvaṉ and Kukaṉ keep watch all night without sleeping, with the vast army camped around them. Then morning comes.