கம்பராமாயணம் 10331 · யுத்த 37.318

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கதிரவன் உதிப்ப, காலைக் கடன் கழித்து இளவலோடும்
அதிர்பொலன் கழலினான் அவ் அருந்தவன் தன்னை ஏத்தி,
விதிதரு விமானம் மேவி, விளங்கிழையோடும், கொற்றம்
முதிர்தரு சேனை யோடும் முனிமனம் தொடரப் போனான்.

பொருள் · Meaning in Tamil

கதிரவன் உதிப்ப - சூரியோதயம் ஆன அளவில்; அதிர் பொலன் கழலினான் - ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த திருவடியுடைய இராமன்; காலைக் கடன் கழித்து - காலைப் பொழுதில் செய்யவேண்டிய நீர்க்கடன் வழிபாடுகளை நிறைவேற்றி; இளவலோடும் - இலக்குவனோடும்; அவ் அருந்தவன் தன்னை ஏத்தி - அந்த அரிய பரத்துவாச முனிவனைத் துதித்து வணங்கி; விதிதரு விமானம் மேவி - பிரமனால் (குபேரனுக்குக்) கொடுக்கப்பெற்ற புட்பக விமானத்தை அடைந்து; விளங்கிழையோடும் - சீதையோடும்; கொற்றம் முதிர் தருகருணையோடும் - வெற்றியால் சிறந்து பெற்ற பேரருளோடும்; முனி மனம் தொடரப் போனான் - பரத்துவாச முனிவனது மனம் அன்பினால் தன்னைப் பின்பற்றி வரச் சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the Sun rose, he finished the morning rites, and with his younger brother
  2. he of the ringing golden anklets praised that great ascetic,
  3. boarded the car that Brahmā gave, with the lady of shining jewels,
  4. and with grace ripened by victory went on, the sage's heart following him.

What the poem says

At sunrise Irāmaṉ performs his morning rites, takes leave of Parattuvāca with Ilakkuvaṉ, and boards the Puṣpaka, once given by Brahmā to Kubēra, with Cītai. As he leaves, the sage's heart goes after him in love.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1katiravaṉ utippa, kālaik kaṭaṉ kaḻittu iḷavalōṭum
atir polaṉ kaḻaliṉāṉ av arun tavaṉtaṉṉai ētti,
viti taru vimāṉam mēvi, viḷaṅkiḻaiyōṭum, koṟṟam
mutir taru karuṇaiyōṭum muṉi maṉam toṭarap pōṉāṉ.