கம்பராமாயணம் 10332 · யுத்த 37.319
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மானம் - புட்பக விமானம்; தாவி - மேலே கிளம்பி; வான் படர்ந்து - விண்ணில் பரந்து சென்று; தடை இலாது ஏகும் வேலை - எதனாலும் தடைபடாமல் செல்கின்ற போது; தீவிய கன்னி ஆகிச் - இனிய கன்னித் தன்மை உடையதாக; செருக்கிய காமச் செவ்வி - நிரம்பி முதிர்ந்த விரும்பத் தக்க பேரழகால்; ஓவியம் உயிர் பெற்று என்ன - சித்திரம் உயிர் கொண்டு வந்தாற் போன்ற; உம்பர் கோன் நகரும் ஒவ்வா - இந்திரனது அமராவதி நகரமும் ஒப்பாகாத; மா இயல் அயோத்தி சூழும் மதில்புறம் தோன்றிற்று - திருமகள் தங்கிய அயோத்தியைச் சுற்றியுள்ள மதிலின் புறம் தோன்றியது. அன்று, ஏ அசைகள். மதிலுக்குக் கன்னித்தன்மை பிறர் கைப்படாமையாகும் 'கன்னி மதில்' எனல் வழக்கு. பிறவற்றை மதில் மேலும் அயோத்தி மேலும் ஏற்றலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the car leapt up, spread across the sky and sped on unhindered,
- sweet as a maiden, in the full bloom of desirable beauty,
- like a painting come to life, the outer wall that rings
- great Ayōttī, which even the city of the king of the gods cannot equal, came into view.
What the poem says
As the Puṣpaka flies on, the walls of Ayōttī appear. The city is pictured as a young woman in her prime, like a painting come alive, surpassing even Intiraṉ's heavenly city. A wall is called "virgin" when no enemy has ever breached it, so the image suits the unconquered fortress.