கம்பராமாயணம் 10333 · யுத்த 37.320
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொன் மதில் கிடக்கை சூழப் பொலிவுடை நகரம் தோன்ற - பொன்னாற் செய்த மதிற்பரப்பாற் சுற்றப்பட்ட அழகுடைய அயோத்தி நகரமானது தோன்ற; நன்மதிக் கிழவர் தம்மை நோக்கிய ஞானமூர்த்தி - நல்ல அறிவால் சிறந்த துணைவர்களைப் பார்த்த ஞான வடிவினனாய இராமபிரான்; சொல் மதித்து ஒருவராலும் சொலப்படா அயோத்தி தோன்றிற்று என்னலும் - சொல்லால் கருதி இத்தகையது என்று ஒருவராலும் சொல்ல இயலாத அயோத்தி மாநகரம் தோன்றியது என்று சொல்லிய அளவிலே; கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சி நின்றார் - அனைவரும் கைகளைத் தலைமேல் குவித்து எழுந்து வணங்கி நின்றார்கள்.
இராமபிரான் அரசு வீற்றிருக்கும் திருநகர் ஆதலின் அதுவே தாம் வழிபடும் திருக்கோயில் எனக்கருதிக் கண்ட மாத்திரத்தே கைகுவித்து எழுந்து வணங்கினர் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the splendid city appeared, ringed by its stretch of golden walls,
- the embodiment of wisdom looked at his wise companions
- and said, “There is Ayōttī, which no one can describe however he weighs his words”;
- at once they rose, joined their hands and stood bowing.
What the poem says
Irāmaṉ points out Ayōttī to his allies, a city beyond the power of words to describe. They rise at once and bow with folded hands, treating the city where Irāmaṉ will reign as a temple to be worshipped.