கம்பராமாயணம் 10334 · யுத்த 37.321

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்னது ஓர் அளவையின் விசும்பின் ஆயிரம்
துன் இருங் கதிரவர் தோன்றினால் என
பொன் அணி புட்பகப் பொரு இல் மானமும்
மன்னவர்க்கு அரசனும் வந்து தோன்றினான்.

பொருள் · Meaning in Tamil

அன்னது ஓர் அளவையின் - அந்த சமயத்தில்; விசும்பின் துன் இருங்கதிரவர் ஆயிரம் தோன்றினார் என - ஆகாயத்தில் நெருங்கிய பெரிய சூரியர் ஆயிரவர் தோன்றினார்கள் என்று சொல்லும்படி; பொன் அணி புட்பகப் பொருஇல் மானமும் - பொன்னால் அழகு பெற்ற புட்பகம் என்னும் பெயருடைய ஒப்பற்ற விமானமும்; மன்னவர்க்கு அரசனும் - அரசர்க்கரசனாகிய சக்கரவர்த்தி இராமபிரானும், வந்து தோன்றினார் - வந்து அநுமன் கண்காணத் தோன்றினர்

'தோன்றினார்' என்னும் வினைமுற்று 'புட்பக விமானமும் மன்னவர்க்கு அரசனும்' என்ற இரண்டையும் தலைமைப் பொருட்கு வினை கொடுப்பவே தலைமையில் பொருளும் முடிந்தன ஆவதோர் முறை பற்றி இயைத்தது என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that very moment, as if in the sky a thousand
  2. great suns, crowded together, had appeared,
  3. the matchless car Puṣpaka, adorned with gold,
  4. and the king of kings came into view.

What the poem says

The scene shifts to Paratan, waiting with Aṉumaṉ at Nandigrāma. Suddenly the golden Puṣpaka appears in the sky, blazing like a thousand suns, carrying the king of kings.

The plural verb covers both the car and Irāmaṉ, the lesser subject being included with the chief one.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉatu ōr aḷavaiyiṉ vicumpiṉ āyiram
tuṉ iruṅ katiravar tōṉṟiṉār eṉa
poṉ aṇi puṭpakap poru il māṉamum
maṉṉavarkku aracaṉum vantu tōṉṟiṉār.