கம்பராமாயணம் 10337 · யுத்த 37.324

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொனொளி மேருவின் பொதும்பில் புக்கது ஓர்
மினொளி மேகம்போல் வீரன் தோன்றலும்,
மன் எதிர் வருநர்கள் ஆர்ப்பு, இராவணன்
தென்நகர்க்கு அப்புறத்து அளவும் சென்றதால்.

பொருள் · Meaning in Tamil

பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர் மின் ஒளிர் மேகம் போல் வீரன் தோன்றலும் - பொன்மயமாக விளங்குகின்ற மேருமலையின் குகைக்குள் நுழைந்த ஒரு மின்னல் விளங்கும் கருமேகம் போல இராமபிரான் காணப்பட்ட உடனே; அந்நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு - அந்த அயோத்தி நகரம் ஆரவாரித்த பேரோசை; இராவணன் தென் நகர்க்கு அப்புறத்து அளவும் சென்றது - இராவணனது தெற்கே உள்ள இலங்கை நகருக்கு அப்பாலும் சென்று ஒலித்தது.

ஆல் அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like a lightning-lit cloud that has entered a hollow
  2. of golden, gleaming Mēru, the hero appeared;
  3. and the great shout that city raised
  4. went beyond even Irāvaṇaṉ's southern city.

What the poem says

Irāmaṉ, dark-skinned and glittering with ornaments in the golden car, looks like a dark cloud flashing with lightning inside a cave of golden Mount Mēru. The moment the people of Ayōttī see him, they raise a roar of joy that carries even past Laṅkā in the far south.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉ oḷir mēruviṉ potumpil pukkatu ōr
miṉ oḷir mēkampōl vīraṉ tōṉṟalum,
ana nakar ārtta pēr ārppu, irāvaṇaṉ
teṉ nakarkku ap puṟattu aḷavum ceṉṟatāl.