கம்பராமாயணம் 10338 · யுத்த 37.325
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கானிடைப் போகிய கமலக் கண்ணனை - காட்டிற்குச் சென்ற தாமரை மலர் போன்ற கண்களை உடைய இராமனை; தானுடை உயிரினை - தன்னுடைய உயிராக உள்ளவனை; தம்பி - அவன் தம்பியாகிய பரதன்; ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய வானுடைத் தந்தையார் வரவு கண்டென நோக்கினான் - ஊன் பொதிந்த உடம்பைப் போகவிட்டு சத்தியத்தை விரும்பி வானுலகு சென்ற தசரத சக்கரவர்த்தியாகிய தன் தந்தையார் திரும்பி வருவது கண்டாற் போலப் பார்த்தான்.
"வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்” (கம்ப. 4018) என்றதனை ஈண்டுக் கருதுக. முன்னர் 'இறந்தனன் தாதையை எதிர்கண் டென்னவே” (கம்ப. 2427) என்று பரதன் இராமனைச் சந்தித்தது பற்றிக் கூறியதும் நினைக்கத்தகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As though he saw the return of his father, now in heaven,
- who left his body of flesh because he wanted truth,
- the younger brother gazed at the lotus-eyed one who had gone to the forest,
- who was his very life.
What the poem says
Paratan looks at Irāmaṉ, who had gone into the forest and is Paratan's very life, as though he were seeing his dead father Tacarataṉ, who gave up his body to keep his word, come back from heaven. Earlier, when Paratan met Irāmaṉ in the forest, the poet used the same image: it was like seeing their dead father face to face.