கம்பராமாயணம் 10339 · யுத்த 37.326
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மேன்மையான் - சிறந்த குணங்களுக்கு இருப்பிடமானவனாகிய பரதன்; முன்பு தாம் பட்ட வான்படர் - ஒருவர் தாம் முன்பு அடைந்த மிகப் பெரிய துன்பம்; கெட்டவான் பொருள் வந்து கிடைப்ப - தொலைத்து விட்ட சிறந்த பொருள் மீண்டும் கிடைத்துவிட அதனால்; ஒழிந்தவரின் - நீங்கப் பெற்றவரைப் போல; பையுள் நோய் சுட்டவன் - துன்ப நோயைத் தொலைத்தவனாய்; மானவன் தொழுதல் உன்னி - இராமனை வணங்கக் கருதி; மாருதி கரத்தை விட்டனன் - இதுவரை பிடித்திருந்த அனுமனது கைகளை இப்போது பிடி நெகிழ விட்டான்.
பரதன் அநுமன் கையைப் பற்றி வந்ததாக வான்மீகம் கூறவில்லை. கம்பரது கற்பனை இது. துன்பத்திற்குத் துணையாவாரைப் பற்றி வருதல் உலகியல்பு ஆதலின்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like those whose great sorrow, suffered before, ends
- when a precious treasure they had lost comes back to them,
- he burned away the sickness of grief, and meaning to worship the noble one,
- the excellent prince let go of Māruti's hand.
What the poem says
Paratan's grief vanishes like the despair of someone who recovers a great lost treasure. Wanting to fold his hands in worship to Irāmaṉ, he finally lets go of Aṉumaṉ's hand, which he had held all through the night's walk. Vālmīki does not have Paratan holding Aṉumaṉ's hand; it is Kampaṉ's own touch, since people in sorrow naturally cling to the one who comforts them.