கம்பராமாயணம் 10356 · யுத்த 37.343
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னமும் - சீதையும்; முன்னர்ச் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ந்தாள் - இராமன் வணங்கியதாகச் சொல்லிய முறைப்படியே கைகேயி, கோசலை, சுமித்திரை ஆகிய தாய்மார்கள் திருவடியில் வணங்கினாள்; தன் நிகர் இலாத வென்றித் தம்பியும் தாயர் தங்கள் பொன் அடித் தலத்தில் வீழ - தனக்குச் சமானம் இல்லாத வெற்றியை உடைய தம்பியாகிய இலக்குவனும் தாய்மார்கள பொலிவுற்ற திருவடிகளில் வீழ்ந்து வணங்க, தாயரும் பொருந்தப் புல்லி - தாய்மார்களும் நன்கு தழுவி; மன்னவற்கு நீயே இளவல் வாழி என்று ஆசி சொன்னார் - இராமனுக்கு நீயே தம்பியாவாய் வாழ்க என்று மங்கலம் உரைத்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The swan-like lady too fell at their feet in the order told before;
- and as the younger brother of unequalled victories fell
- at the golden feet of the mothers, they held him close
- and blessed him: “You alone are the true younger brother of the king. Long may you live!”
What the poem says
Cītai bows to the three queens in the same order as Irāmaṉ, beginning with Kaikēyi. Ilakkuvaṉ bows too, and the mothers embrace him and bless him: he alone, who shared Irāmaṉ's exile, has truly been a younger brother to the king.