கம்பராமாயணம் 10357 · யுத்த 37.344

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சேவடி இரண்டும் அன்பின் அடி உறை ஆகச் சேர்த்தி,
பூவடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமி விம்மி,
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன், நின்ற நம்பி,
ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன், அழுது சோர்வான்.

பொருள் · Meaning in Tamil

நின்ற நம்பி - அங்கு நின்ற ஆடவர் திலகனாய இராகவன்; சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி - திருவடி நிலையாகிய பாதுகை இரண்டையும் தன் உள்ளத்து அன்பையும் அவ்விராகவனது திருவடிக்கீழ் தங்குவதாகச் சேர்ப்பித்து; பூ அடி பணிந்து வீழ்ந்த பரதனை - தன் மலர் போன்ற அடிகளில் வணங்கி விழுந்த பரதனைப் பார்த்து; பொருமி விம்மி - புலம்பி விம்மி; நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் - தன் நாவால் சொல்லத்தகும் வாசகம் ஒன்றும் உணராதவனாய்; அழுது சோர்வான் - புலம்பிச் சோர்ந்து; ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன் - உயிரும் உடலும் ஒன்றாகுமாறு தழுவினான்.

முன்பு பெற்ற பாதுகையை இப்போது அன்போடு முன் வைத்து வணங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Paratan laid down the two sandals, and his love with them, as an offering at his feet,
  2. and bowed and fell at those flower-feet; the noble one standing there, sobbing and heaving,
  3. could find no word at all to say with his tongue;
  4. weeping and faint, he embraced him so that life and body became one.

What the poem says

Paratan lays down before Irāmaṉ the sandals he has carried and ruled by for fourteen years, offering his whole love with them, and falls at his feet. Irāmaṉ is so overcome that he cannot speak; weeping, he holds his brother in an embrace so close it is as though soul and body had merged.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cēvaṭi iraṇṭum aṉpum aṭiyuṟaiyākac cērtti,
pū aṭi paṇintu vīḻnta parataṉaip porumi vimmi,
nāviṭai uraippatu oṉṟum uṇarntilaṉ, niṉṟa nampi,
āviyum uṭalum oṉṟat taḻuviṉaṉ, aḻutu cōrvāṉ.