கம்பராமாயணம் 10361 · யுத்த 37.348

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மூவர்க்கும் இளைய வள்ளல் முடி மிசை முகிழ்த்த கையன்,
தேவர்க்கும் தேவன் தாளும், செறிகழல் இளவல் தாளும்,
பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான்; எடுத்தனர் பொருந்தப் புல்ல,
வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடித்தலத்து வீழ்ந்தான்.

பொருள் · Meaning in Tamil

மூவர்க்கும் இளைய வள்ளல் - மூவர்க்கும் இளையவனாகிய சத்துருக்கன்; முடிமிசை முகிழ்த்த கையன் - தலைமேற் கூப்பிய கையுடையவனாய்; தேவர்க்கும் தேவன் தாளும் - இராமன் திருவடி, செறிகழல் இளவல் தாளும் - கட்டிய கழல் உடைய இலக்குவன் திருவடி; பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான் - ஆகியவற்றில் மலர் மழை பொழிந்து விழுந்து வணங்கினான்; பொருந்தப் புல்லி எடுத்தனர் - அவர்கள் அவனை நன்கு தழுவித் தூக்கினர் (பின்னர் அவன்); வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடித்தலத்து வீழ்ந்தான் - பொய்கையில் வாழும் அன்னம் போன்ற சீதையின் மலர் போன்ற திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The generous one younger than all three, his hands folded above his head,
  2. showered flowers on the feet of the god of gods and the feet of the younger brother with close-set anklets
  3. and fell before them; they raised him and held him close;
  4. then he fell at the flower-feet of her who is like a swan in a pool.

What the poem says

Now Catturukkaṉ (Śatrughna), the youngest of the four brothers, comes forward with hands joined above his head, strews flowers at the feet of Irāmaṉ and Ilakkuvaṉ and falls before them. They lift and embrace him, and he then bows at the feet of Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mūvarkkum iḷaiya vaḷḷal muṭimicai mukiḻtta kaiyaṉ,
tēvarkkum tēvaṉ tāḷum, ceṟi kaḻal iḷaval tāḷum,
pūvarkkam poḻintu vīḻntāṉ; eṭuttaṉar poruntap pulli,
vāvikkuḷ aṉṉam aṉṉāḷ malar aṭit talattu vīḻntāṉ.