கம்பராமாயணம் 10371 · யுத்த 38.1

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நம்பி அப் பரதனோடு நந்தியம் பதியை நண்ணி,
வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர்வினை முற்றி, மற்றைத்
தம்பியரோடு தானும் தண்புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பச் செய்தார்.

பொருள் · Meaning in Tamil

நம்பியும் - இராமபிரானும்; பரதனோடு - (தவமிருந்த); பரதனோடும், மற்றைத் தம்பியரோடு - மற்றைத் தம்பியர்களோடும் தானும் - தானுமாக; நந்தி அம்பதியை நண்ணி - நந்திக் கிராமமாகிய அழகிய நகரத்தை அடைந்து; வம்பு இயல் சடையும் மாற்றி - நறுமணம் கமழ்கின்ற சடையை நீக்கி; மயிர்வினை முற்றி - மயிர் கழிக்கும் செயலை முடித்து; தண்புனல் படிந்த பின்னர் - குளிர்ந்த நீரில் குளித்த பிறகு; உம்பரும் உவகை கூர - தேவர்களும் மகிழ்ச்சி கொள்ளுமாறு; ஒப்பனை ஒப்பச் செய்தார் - அழகு நலன்களைப் பொருந்துமாறு செய்யலாயினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The noble one, with Paratan, reached Nantiyampati,
  2. put off his fragrant matted locks, had his hair dressed, and when he,
  3. with his other younger brothers, had bathed in the cool water,
  4. they adorned themselves fittingly, so that even the gods rejoiced.

What the poem says

The Coronation chapter begins. Irāmaṉ goes with Paratan and his other brothers to Nandigrāma, where Paratan had lived as an ascetic. There they cut off the matted hair of their years of austerity, bathe, and dress in royal finery, to the delight of the gods.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nampiyum parataṉōṭu nantiyampatiyai naṇṇi,
vampu iyal caṭaiyum māṟṟi, mayir viṉai muṟṟi, maṟṟait
tampiyarōṭu tāṉum taṇ puṉal paṭinta piṉṉar,
umparum uvakai kūra, oppaṉai oppac ceytār.