கம்பராமாயணம் 10373 · யுத்த 38.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஊழியின் இறுதி காணும் - யுக முடிவின் எல்லை காணவல்ல; வலியினது - உறுதி மிக்கதான; உயர்பொன் தேரின் - உயர்ந்த பொன்னாலாகிய தேரில்; ஏழ் உயர் மதமா அன்ன - ஏழு முழ உயரமுள்ள மதம் செறிந்த யானை போன்ற; இலக்குவன் - (இளையவனாகிய) இலக்குவன்; கவிகை ஏந்த - வெண் கொற்றக் குடையைப் பிடித்து நிற்கவும்; பாழிய மற்றைத் தம்பி - வல்லமை மிக்க இன்னொரு தம்பி (சத்துருக்கன்); பால் நிறக் கவரி பற்ற - வெண்ணிறமான சாமரையை ஏந்தவும்; பூழியை அடக்கும் கண்ணீர்ப் பரதன் - இந்தப் புவியையே மறைக்கவல்ல உவகைக் கண்ணீர் சிந்தும் பரதன்; கோல் கொள்ள - குதிரைகளை ஏவும் கோலைக் கொண்டு செலுத்தவும்; போனான் - (இராமபிரான்) சென்றான்.
ஏழு முழம் உயர்ந்திருத்தல் பட்டத்து யானையின் சிறப்பு. புழுதி என்பது மண்ணாதலின் பூமி எனப் பொருள் பெற்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the tall golden chariot, strong enough to see out the end of the ages,
- with Ilakkuvaṉ, like a seven-cubit elephant in rut, holding the parasol,
- the other mighty brother holding the milk-white whisk,
- and Paratan, whose tears could lay the dust, taking the reins, he went on.
What the poem says
The procession into Ayōttī: Ilakkuvaṉ, tall as a royal elephant seven cubits high, holds the white royal parasol over Irāmaṉ; Catturukkaṉ waves the white yak-tail whisk; and Paratan drives the chariot, weeping tears of joy so plentiful they could settle the dust of the road.