கம்பராமாயணம் 10374 · யுத்த 38.4

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வீடணன் குருசில் மற்றை வெங்கதிர்ச் சிறுவன் வெற்றிக்
கோடு அணை குன்றம் ஏறி, கொண்டல் தேர் மருங்கு போத,
தோடு அணை மவுலிச் செங்கண் வாலி சேய் தூசு செல்ல,
சேடனைப் பொருவும் வீர மாருதி பின்பு சென்றான்.

பொருள் · Meaning in Tamil

வீடணக் குரிசில் - வீடணனாகிய சிறப்பு மிக்கவனும்; மற்றை - பின்னும்; வெங்கதிர்ச் சிறுவன் - வெப்பம் உமிழும் கதிரவன் மைந்தன் சுக்கிரீவனும்; வெற்றிக்கோடு அணை - (போரில்) வெற்றி தேடித் தரும் கொம்புகளை உடைய; குன்றம் ஏறி - மலை போன்ற யானை மீது இவர்ந்து; கொண்டல் தேர் மருங்கு செல்ல - முகில் வண்ணனான இராமபிரானின் தேருக்கு அருகில் செல்லவும்; தோடு அணை மவுலி - மலர் செறிந்த மகுடம் சூடிய; செங்கண் வாலி சேய் - சிவந்த கண்களை உடைய வாலியின் மைந்தன் அங்கதன்; தூசி செல்ல - முன்னணியிற் செல்லவும்; சேடனைப் பொருவும் - ஆதிசேடனுக்கு ஒப்பான; வீர மாருதி - வீரம் செறிந்த அனுமன்; பின்பு சென்றான் - பின்னர்ச் சென்றான்.

முன்னர் விரிஞ்சனுக்கும் விடை வல்லானுக்கும் உவமித்த அனுமனை இங்கு ஆதிசேடனுக்கு உவமித்தார். அறிவிற் சிறந்தவன் சேடன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The noble Vīṭaṇaṉ and the other, the son of the hot-rayed Sun,
  2. mounted hill-like elephants with victorious tusks and rode beside the chariot of the dark cloud;
  3. the red-eyed son of Vālī, with a crown set with flowers, went in the vanguard;
  4. and heroic Māruti, a match for Cēṭaṉ, went behind.

What the poem says

The allies take their places in the procession: Vīṭaṇaṉ and Cukkirīvaṉ ride elephants beside Irāmaṉ's chariot, Aṅkataṉ leads the vanguard, and Aṉumaṉ follows at the rear. Aṉumaṉ, compared elsewhere to Brahmā and Śiva, is here likened to Ādiśēṣa, the serpent famed for wisdom.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīṭaṇak kuricil maṟṟai veṅ katirc ciṟuvaṉ veṟṟik
kōṭu aṇai kuṉṟam ēṟi, koṇṭal tēr maruṅku cella,
tōṭu aṇai mavulic ceṅ kaṇ vāli cēy tūci cella,
cēṭaṉaip poruvum vīra māruti piṉpu ceṉṟāṉ.