கம்பராமாயணம் 10375 · யுத்த 38.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வரிசைக்கு ஆன்ற திறம் உற்ற - தகுதிக்கேற்பக் கூறுபாடு உற்ற; சிறப்பர் ஆகி - சிறப்பை உடையவராகி; மானுடச் செவ்வி - மனித வடிவுடன் கூடி; வீரம் பெறுகுற்ற - ஆண்மை பொருந்தியவராகி; வனப்பர் - அழகு உடையவரும்; உச்சி பிறங்கு வெண் குடையர் - தலை மீது வெண்கொற்றக் குடையை உடையவரும்; செச்சை - செஞ்சாந்தக் குழம்பு பூசப் பெற்றதும்; மறு உற்ற - தழும்பு பட்டதுமான; அலங்கல் மார்பர் - மாலை சூடிய மார்பினை உடையவரும்; அறுபத்தேழ் அமைந்த கோடி - அறுபத்தேழு கோடி எண்ணிக்கையினருமாகிய; வானரத் தலைவர் யானை மேல் போனார் - வானரத் தலைவர்கள் யானை மீது ஏறிச் சென்றனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Sixty-seven crores of them, on elephants, honoured with the distinctions
- fitting to their rank, in the comely form of men, beautiful
- with the valour they had won, with white parasols gleaming above their heads,
- their garlanded chests scarred and smeared with red paste — so went the monkey chiefs.
What the poem says
The monkey chieftains, sixty-seven crores of them, have taken human form for the occasion. They ride elephants with honours suited to their rank, under white parasols, their garlanded chests smeared with red sandal and marked with battle scars.