கம்பராமாயணம் 10376 · யுத்த 38.6

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எட்டு அமை ஈறு பத்தின் எழுதிரை வளாக வேந்தர்,
பட்டம் வைத்து அமைந்த நெற்றிப் பகட்டினர், பைம்பொன் தேரர்,
வட்டவெண் குடையர் வீசு சாமரை மருங்கர், வானைத்
தொட்ட வெஞ்சோதி மோலிச் சென்னியர், தொழுது சூழ்ந்தார்.

பொருள் · Meaning in Tamil

நெற்றிப் பட்டம் வைத்து அமைந்த - நெற்றிப் பட்டம் தைத்து அமைக்கப்பட்ட; பகட்டினர் - யானையை உடையவரும், பைம்பொன் தேரர் - பசும் பொன்னாலமைந்த தேரினை உடையவரும், வட்ட வெண்குடையர் - வட்ட வடிவமான வெண் குடையை உடையவரும்; சாமரை வீசு மருங்கர் - இருபுறமும் கவரி வீசப் பெற்றவரும்; வானைத் தொட்ட - ஆகாயத்தை அளாவும்; வெஞ்சோதி - வெவ்விய ஒளியை உடைய; மோலிச் சென்னியர் - மகுடம் தரித்த தலையை உடையவருமான; எட்டென இறுத்த பத்தின் - எட்டென்று முடிகின்ற பத்து அதாவது பதினெட்டுப் பிரிவான; ஏழ் பொழில் வளாக வேந்தர் - ஏழு பூமிகளின் எல்லையிலுமிருந்த மன்னர்கள்; தொழுது சூழ்ந்தார் - வணங்கிச் சூழ்ந்தனர்.

பதினெட்டு நாடுகளாவன சிங்களம், புட்பகம் சோனகம், சாவகம், சீனம், துளு, குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், திராவிடம், கலிங்கம், அங்கம், சங்கம், மகதம், மராடம் முதலியனவாம். ஏழ்பொழில் - ஏழு தீவுகளாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The kings of the eighteen lands within the seven continents,
  2. with elephants bearing frontlet plates on their brows, with chariots of fresh gold,
  3. with round white parasols, with whisks waving at their sides, their heads
  4. crowned with diadems whose fierce light touched the sky, bowed and gathered round.

What the poem says

Kings from the eighteen lands across the seven continents, each with his royal elephant, golden chariot, white parasol, waving whisks and blazing crown, gather around Irāmaṉ and pay homage. The eighteen lands traditionally include Ceylon, Java, China, Tulu, Kodagu, Konkan, Kannada, Telugu, Drāviḍa, Kaliṅga, Aṅga and Magadha.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṭṭu eṉa iṟutta pattiṉ ēḻ poḻil vaḷāka vēntar,
paṭṭam vaittu amainta neṟṟip pakaṭṭiṉar, paim poṉ tērar,
vaṭṭa veṇkuṭaiyar vīcu cāmarai maruṅkar, vāṉait
toṭṭa veñ cōti mōlic ceṉṉiyar, toḻutu cūḻntār.