கம்பராமாயணம் 10378 · யுத்த 38.8

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேவரும், முனிவர் தாமும், திசைதொறும் முறையின் சிந்த,
ஓவல் இல் மாரி ஏய்ப்ப, எங்கணும் உதிர்ந்து வீங்கி,
கேவலம் மலராய் வேறு ஓர் இடம் இன்றிக் கிடந்த ஆற்றால்
பூ எனும் நாமம் இன்று இவ் உலகிற்குப் பொருந்திற்று அன்றே.

பொருள் · Meaning in Tamil

தேவரும் முனிவர் தாமும் - வானவரும் முனிவர்களும்; திசை தொறும் மலர்கள் சிந்த - எல்லாத் திசைகளிலிருந்தும் பூக்களைச் சொரிய; ஓவல் இல் மாரி ஏய்ப்ப - இடையறாது மழை பொழிவதைப் போன்று; எங்கணும் உதிர்ந்து வீங்கி - எல்லா இடத்திலும் பொழிந்து பெருகி; கேவல மலராய் - மலர்கள் மட்டுமேயாக நிறைந்து; வேறு ஓர் இடமின்றிக் கிடந்த ஆற்றால் - மற்றேதும் இடம் பெற முடியாமற் கிடந்த தன்மையால்; இவ்வுலகிற்கு - இந்தப் புவிக்கு, இன்று - இந்த நாளில்; பூ எனும் நாமம் - பூ என்ற பெயர்; பொருந்திற்று - பொருந்துவதாயிற்று; அன்று - அசை: ஏ - தேற்றம்;

பூமிக்குப் பூ என்னும் பெயரமைந்தமைக்குப் பிறிதொரு காரணம் கற்பித்தார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the gods and the sages scattered flowers in every direction,
  2. like rain that never ceases, they fell everywhere and piled up
  3. until there was nothing but flowers, with no space left for anything else;
  4. and so on this day the name pū, flower, truly fitted this world.

What the poem says

The gods and sages shower so many flowers that the whole earth is covered with nothing but blossoms. The poet plays on the Tamil word pū, which means both "flower" and "earth" (from Sanskrit bhū): on this day the earth earned its name. It is a playful invented reason for the name.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēvarum, muṉivartāmum, ticaitoṟum malarkaḷ cinta,
ōval il māri ēyppa, eṅkaṇum utirntu vīṅkik
kēvala malarāy vēṟu ōr iṭam iṉṟik kiṭanta āṟṟāl
pū eṉum nāmam iṉṟu iv ulakiṟkum poruntiṟṟu aṉṟē.