கம்பராமாயணம் 10380 · யுத்த 38.10

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1துரகத் தார்ப் புரவி எல்லாம் மூங்கையர் சொல் பெற்றென்ன,
அரவப் போர் மேகம் என்ன ஆலித்த; மரங்கள் ஆன்று,
பருவத்தால் பூத்த என்னப் பூத்தன; பகைவிற் சீறும்
புருவத்தார் மேனி எல்லாம் பொன்நிறப் பசலை பூத்த.

பொருள் · Meaning in Tamil

துரகத் தார்ப் புரவி எல்லாம் - கிண்கிணி மாலை யணிந்த குதிரைகள் எல்லாம்; மூங்கையர் சொல் பெற்றென்ன - ஊமையர்கள் பேசும் திறம் பெற்றாற் போலவும்; அரவம் போர் மேகம் என்ன - ஆரவார ஒலி முழக்கும் மேகங்கள் போலவும், ஆலித்த - கனைத்தன; மரங்கள் - அனைத்து மரங்களும்; ஆன்ற பருவத்தால் - பொருந்திய பருவ காலத்தில்; பூத்த என்ன - மலர்ந்தன போன்று; பூத்தன - விரிந்தன; பகையின் சீறும் - எதிரிகள் மீது சினந்து வளைவது போல் (வளையும்); புருவத்தார் - புருவத்தை உடைய மகளிர்; மேனி எல்லாம் - உடல் முழுவதும்; பொன் நிறப் பசலை பூத்த - தங்க நிறப் பசலை படர்ந்தது.

பதினான்கு ஆண்டுகள் கனைக்காதிருந்த குதிரைகள் இராமன் வருகையால் கனைக்கலாயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the horses with garlands of bells, as though the dumb had found speech,
  2. neighed like roaring, thundering clouds; the trees
  3. blossomed as if in their proper season;
  4. and on the bodies of the women whose brows arch like anger at a foe, the golden pallor of longing bloomed.

What the poem says

Everything comes back to life. Horses that had been silent for fourteen years neigh like thunder, as if the mute had found voices, and trees burst into flower out of season. The women of the city, whose brows are curved like bows bent in anger, turn the golden pale colour (pacalai) that in Tamil poetry marks a woman's lovesick longing, here at the sight of Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1turakat tārp puravi ellām mūṅkaiyar col peṟṟeṉṉa,
aravam pōr mēkam eṉṉa ālitta; maraṅkaḷ āṉṟa,
paruvattāl pūtta eṉṉap pūttaṉa; pakaiyiṉ cīṟum
puruvattār mēṉi ellām poṉ niṟap pacalai pūtta.