கம்பராமாயணம் 10381 · யுத்த 38.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆயது ஓர் அளவில் - அந்தச் சமயத்தில்; செல்வத்து அண்ணலும் - எல்லாத் திருவும் பொருந்திய தலைவன் இராமபிரானும்; அயோத்தி நண்ணி - அயோத்தி நகரையடைந்து; தாயரை வணங்கி - தன் அன்னையாரைப் பணிந்து; நாயகக் கோயில் எய்தி - அனைத்துலக நாயகனான திருமாலின் ஆலயத்தை அடைந்து; தங்கள் இறையொடு - தங்கள் குலதெய்வத்தோடு; முனியைத் தாழ்ந்து - குல குருவான வசிட்டரையும் வணங்கி; நானிலக் கிழத்தியோடும் - நில மகளோடு; சேயொளிக் கமலத்தாளும் - சிவந்த ஒளிமிக்க தாமரைத் திருவும்; திருநடம் செய்யக் கண்டான் - (மிக்க உவகையோடு) களி நடம் புரிவதைக் கண்ணுற்றான்.
நாயகக் கோயில் - அரண்மனையும் ஆகலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that moment the lord of fortune reached Ayōttī,
- bowed to his mothers, bowed to their family god and to the sage,
- entered the chief temple, and saw the lady of the four-fold land
- and the lady of the red-glowing lotus dancing a sacred dance.
What the poem says
Irāmaṉ enters Ayōttī, bows to his mothers, to the family deity and to the family preceptor Vacittaṉ, and comes to the chief shrine, which may also mean the royal palace. There he sees the Earth goddess and Lakṣmī, goddess of fortune, dancing for joy at his return.