கம்பராமாயணம் 10383 · யுத்த 38.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வேசியர் உடுத்த கூறை - கணிகையர் உடுத்திருந்த சேலையினை (தடுமாற்றம் நேர்ந்தமையால்); வேதியர் சுற்ற - வேதியர்கள் தரிக்கவும்; வெற்றிப் பாசிழை மகளிர் ஆடை - ஊடலில் வெற்றி கொள்ளும் பசிய பொன்னணிகள் அணிந்த பெண்களின் ஆடையினை; அந்தணர் பறித்துச் சுற்ற - அந்தணர் வலிந்து பறித்துச் சுற்றிக் கொள்ளவும்; வாசம் - நறுமணப் பொருள்களும்; மென் கலவைச் சாந்து - மெல்லிதாய் நறும் பொருள்கள் கலந்து அரைத்த சாந்தும்; என்று இனையன - என்னும் இவற்றை, பூசலார் - பூசிக் கொள்ளாது; புகுந்துளோரும் - வந்தவர்களும்; மயக்கம் தன்னால் - மக்களின் உவகை மயக்கத்தால்; பூசினர்க்கு இரட்டி ஆனார் - (மணப் பொருள்கள் பூசியவரைக் காட்டிலும்) இருமடங்கு அப்பிக் கொண்டார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Brahmins wrapped themselves in the cloth that courtesans had worn;
- priests snatched and wound on the garments of women with fresh gold jewels, victorious in love;
- and in the confusion, those who had come in without smearing on perfume,
- soft blended paste and such things, ended up with twice as much as those who had.
What the poem says
More comedy of the crowd's delirium: in the crush and excitement, Vedic brahmins end up wearing courtesans' saris and women's clothes, and people who had not anointed themselves come away covered in twice as much scent and sandal paste as those who had, from rubbing against everyone else.