கம்பராமாயணம் 10384 · யுத்த 38.14

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இறைப்பெருஞ் செல்வம் நீத்த ஏழ் இரண்டு ஆண்டும், யாரும்
உறைப்பு இலர் ஆதலானே, வேறு இருந்து ஒழிந்த மின்னார்,
பிறைக்கொழுந்து அனைய நெற்றிப் பெய்வளை மகளிர், மெய்யை
மறைந்தனர் பூணின், மைந்தர் மனங்களின் மறுக்கம் கொள்ள.

பொருள் · Meaning in Tamil

இறை - ஆட்சியாகிய; பெருஞ்செல்வம் நீத்த - பெருந்திருவினை நீங்கிய; ஏழ் இரண்டு ஆண்டும் - பதினான்கு ஆண்டுக் காலத்திலும்; யாரும் உறைப்பு இலர் ஆதலானே - அனைவரும் மனமகிழ்ச்சியற்றிருந்தவர்களாதலால்; வேறு இருந்து ஒழிந்த - (கணவருடன் கூடாது) தனித்திருந்து; கழித்த; பிறைக் கொழுந்து அனைய நெற்றி - இளம் பிறை போன்ற நெற்றியினை உடைய, மின்னார் - மின்னலைப் போன்றவரும்; பெய்வளை மகளிர் - வளையல் அணிந்தவருமான பெண்கள்; மைந்தர் - ஆண்மக்களுடைய; உயிர்க்கு மறுக்கம் எய்த - உயிருக்குக் கலக்கம் ஏற்படுமாறு; மெய்யை - தம் உடலை; பூணின் மறைத்தனர் - அணிகலன்களால் மூடிக் கொண்டனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Through the twice seven years when the king's great fortune was gone, since no one
  2. had any heart for it, the lightning-like women who had lived apart,
  3. with brows like the young crescent moon and bangles on their wrists,
  4. now covered their bodies with jewels, and the men's hearts were thrown into turmoil.

What the poem says

During the fourteen years without their king, no one in Ayōttī had the heart for pleasure, and wives had lived apart from their husbands. Now the women, beautiful as lightning, with crescent-moon brows, deck themselves in jewels so lavishly that the men are thrown into a flutter.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṟaip peruñ celvam nītta ēḻ iraṇṭu āṇṭum, yārum
uṟaippu ilar ātalāṉē, vēṟu iruntu oḻinta miṉṉār,
piṟaik koḻuntu aṉaiya neṟṟip pey vaḷai makaḷir, meyyai
maṟaittaṉar pūṇiṉ, maintar uyirkku oru maṟukkam tōṉṟa.