கம்பராமாயணம் 10386 · யுத்த 38.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆயது ஓர் அளவில் ஐயன், பரதனை அருளின் நோக்கி,
‘தூய வீடணற்கும், மற்றைச் சூரியன் மகற்கும், தொல்லை
மேய வானரங்களாய வீரர்க்கும், பிறர்க்கும், நம்தம்
நாயகக் கோயில் உள்ள நலம் எலாம் தெரித்தி ‘என்றான்
பொருள் · Meaning in Tamil
ஆயது ஓர் அளவில் - அந்தப் பொழுதில்; ஐயன் - இராமபிரான்; பரதனை அருளின் நோக்கி - பரதனை அன்புறப் பார்த்து; 'தூய வீடணற்கும் - உளந்தூய வீடணனுக்கும்; மற்றை - மற்றும்; சூரியன் மகற்கும் - கதிரவன் மைந்தனான சுக்கிரீவனுக்கும்; தொல்லை மேய - பழமை வாய்ந்த; வானரர்கள் ஆய வீரர்க்கும் - வானர வீரர்களுக்கும்; பிறர்க்கும் - மற்றையோருக்கும்; நம்தம் - நம்முடைய; நாயகக் கோயில் உள்ள - முதன்மை வாய்ந்த அரண்மனையில் அமைந்துள்ள; நலம் எலாம் தெரித்தி - சிறப்புக்கள் எல்லாவற்றையும் விளக்குவாயாக; என்றான் - என்று கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that moment the lord looked at Paratan with grace
- and said: “To pure Vīṭaṇaṉ, and to the other, the son of the Sun,
- to the heroes who are our old friends the monkeys, and to the others,
- show all the splendours there are in our chief palace.”
What the poem says
Irāmaṉ asks Paratan to act as host for the allies and show Vīṭaṇaṉ, Cukkirīvaṉ, the monkey heroes and the other guests all the splendours of the royal palace, as befits honoured friends.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyatu ōr aḷavil aiyaṉ, parataṉai aruḷiṉ nōkki,
‘tūya vīṭaṇaṟkum, maṟṟaic cūriyaṉ makaṟkum, tollai
mēya vāṉararkaḷ āya vīrarkkum, piṟarkkum, namtam
nāyakak kōyil uḷḷa nalam elām teritti ‘eṉṟāṉ