கம்பராமாயணம் 10389 · யுத்த 38.19

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விண்டுவின் மார்பில் காந்தும் மணி என விளங்கும் மாடம்
கண்டனர்; பரதன் தன்னை வினவினர் அவர்க்குக் காதல்
புண்டரீகத்து வைகும் புராதனன், கன்னல் தோளான்,
கொண்டநல் தவம் தன்னாலே உவந்து, முன் கொடுத்தது என்றான்.

பொருள் · Meaning in Tamil

விண்டுவின் மார்பில் - திருமாலின் மார்பினில்; காந்தும் மணி என - ஒளி விடும் கௌத்துவ மணி போன்று; விளங்கும் மாடம் கண்டனர் - திகழும் மாடத்தைக் கண்டவர்கள்; பரதன் தன்னை வினவினர் - பரதனிடம் அது குறித்துக் கேட்டனர்; அவர்க்கு - அவர்களிடம் (பரதன்); 'புண்டரீகத்துள் வைகும் புராதனன் - உந்தித் தாமரையில் வாழும் பழம் பெருமை மிக்க பிரமதேவன்; கன்னல் தோளான் - கரும்பு போல் இனிமை மிக்க தோள்களை உடைய இட்சுவாகு மன்னனுக்கு; கொண்ட நல் தவத்தினாலே - (அவன்) மேற்கொண்ட அருந்தவத்தைப் பாராட்டி; காதல் - அன்புடன்; உவந்து - மகிழ்ந்து; முன் கொடுத்தது - முன்னர் பரிசாகத் தந்ததாகும்; என்றான் - எனக் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They saw a mansion that shone like the jewel blazing on Viṣṇu's chest,
  2. and asked Paratan about it. To them he said: “The ancient one who dwells in the lotus,
  3. pleased with the good penance done by him of the sugar-cane shoulders,
  4. lovingly gave it to him long ago.”

What the poem says

The guests see a mansion as bright as the Kaustubha gem on Viṣṇu's breast and ask Paratan about it. He explains that Brahmā, who sits in the lotus springing from Viṣṇu's navel, gave it long ago to their ancestor King Ikṣvāku as a reward for his austerities. "Sugar-cane" plays on the name Ikṣvāku, from ikṣu, sugar cane.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṇṭuviṉ mārpil kāntum maṇi eṉa viḷaṅkum māṭam
kaṇṭaṉar; parataṉ taṉṉai viṉaviṉar avarkkuk kātal
puṇṭarīkattuḷ vaikum purātaṉaṉ, kaṉṉal tōḷāṉ,
koṇṭa nal tavamtaṉṉālē uvantu, muṉ koṭuttatu eṉṟāṉ.