கம்பராமாயணம் 10390 · யுத்த 38.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பங்கயத்து ஒருவன் - தாமரையில் வைகும் ஒப்பற்ற பிரமதேவன்; இக்குவாகுவிற்கு - இட்சுவாகு மன்னனுக்கு; அளித்த பான்மைத்து - அளித்த சிறப்புக்குரிய; இங்கு இது மலராள் வைகும் மாடம் - இங்கு அமைந்துள்ள இந்த திருமகள் தங்கும் இனிய மாடம்; என்று இசைத்த போதில் - என்று பரதன் இயம்பியபோது, (வீடணாதியர்) எங்களால் துதிக்கலாகும் இயல்பதோ - எங்களால் புகழக் கூடிய அளவினதோ இது?; என்று கூறி - என்று மொழிந்து; செங்கைகள் கூப்பி - தம் சிவந்த கரங்களால் வணங்கி, வேறு ஓர் மண்டபம் அதனில் - மற்றொரு மண்டபத்துக்கு; சேர்ந்தார் - சென்று சேர்ந்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “This, here, is the one the unique one of the lotus gave to Ikṣvāku;
- it is the mansion where the lady of the flower dwells,” he said; and at that,
- saying, “Is this something we could ever praise?”,
- they joined their red hands in worship and went on to another hall.
What the poem says
Paratan tells them that this mansion, Brahmā's gift to Ikṣvāku, is where Lakṣmī herself dwells. Vīṭaṇaṉ and the others feel it is beyond any praise of theirs, salute it with folded hands, and move on to another hall.