கம்பராமாயணம் 10391 · யுத்த 38.21

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘
பாட வேறுபாடு · Project Madurai reads
1இருந்தனர், அனைய மாடத்து இயல்பு எலாம் எண்ணி எண்ணி;
பரிந்தனன் இரவி மைந்தன், பரதனை வணங்கி, ‘தூயோய்!
கருந்தட முகில் அன்னாற்குக் காப்பு நாண் அணியும் நன்னாள்
தெரிந்திடாது இருத்தல் என்னோ? ‘ என்றலும், அண்ணல் செப்பும்.

பொருள் · Meaning in Tamil

அனைய மாடத்து இயல்பு எலாம் - அந்த மாடத்தின் தன்மையை எல்லாம்; எண்ணி எண்ணி இருந்தனர் - (வீடணாதியர்) நினைந்து நினைந்து வியந்திருந்தனர்; இரவி மைந்தன் - சூரியன் புதல்வனாகிய சுக்கிரீவன்; பரிந்தனன் - அன்பு பூண்டவனாய்; பரதனை வணங்கி - பரதனைப் பணிந்து; 'தூயோய்! - புனிதம் மிக்கவனே; கருந்தட முகிலினாற்கு - கரிய பெரிய முகில் போலும் நிறம் படைத்த இராமபிரானுக்கு; காப்பு நாண் - (மங்கல மகுடம் புனைதற்கு) காப்பு நாணினை; அணியும் நல்நாள் - அணிந்து கொள்ளும் இனிய நாள்; தெரிந்திடாது இருத்தல் என்னோ - இன்னமும் நாங்கள் அறியமுடியாமல் இருப்பது ஏன்; என்றலும் - எனக் கேட்டலும்; அண்ணல் செப்பும் - பரதன் கூறுவானாயினன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They sat there, thinking over and over about all the qualities of that mansion;
  2. the son of the Sun, eagerly, bowed to Paratan and said: “Pure one!
  3. Why is the auspicious day when the great dark cloud
  4. will wear the protective thread still not known?” And the noble one replied.

What the poem says

As the guests marvel at the palace, Cukkirīvaṉ, impatient with affection, asks Paratan why the auspicious day for Irāmaṉ's coronation has not yet been fixed. The protective thread (kāppu) is tied on the wrist before a great ceremony. Paratan answers in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iruntaṉar, aṉaiya māṭattu iyalpu elām eṇṇi eṇṇi;
parintaṉaṉ iravi maintaṉ, parataṉai vaṇaṅki, ‘tūyōy!
karun taṭa mukiliṉāṟkuk kāppu nāṇ aṇiyum nal nāḷ
terintiṭātu iruttal eṉṉō? ‘ eṉṟalum, aṇṇal ceppum.