கம்பராமாயணம் 10394 · யுத்த 38.24

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரியணை பரதன் ஈய, அதன்கண் ஆண்டு இருந்த அந்தப்
பெரியவன், அவனை நோக்கி, ‘பெருநிலக் கிழத்தியோடும்
உரியமா மலராளோடும் உகந்தனன் ஒருவு இல் செல்வம்
கரியவன் துய்த்தற்கு ஏய்ந்த காப்பு நாண் நாளை ‘என்றான்.

பொருள் · Meaning in Tamil

அரியணை ஈய - சிங்காதனம் இடவும்; அதன் கண் ஆண்டு இருந்த - அதன் மீது அங்கே அமர்ந்த; அந்தப் பெரியவன் - அந்தப் பெருந்தகை; அவனை நோக்கி - பரதனைப் பார்த்து; 'பெரு நிலக் கிழத்தியோடும் - பூமிப் பிராட்டியோடும்; உரிய மாமலராளோடும் - பொருந்திய திருமகளோடும்; உகந்தனர் - உவந்திருந்து; ஒருவு இல் செல்வம் - அழியாப் பெருஞ்செல்வம் (நுகர்ந்து), கரியவன் - கரு நிறத்து இராமன்; உய்த்தற்கு - ஆட்சி நடத்துதற்கு; ஒத்த காப்பு நாள் - இசைந்த காப்பு அணியும் நன்னாள்; நாளை - நாளைய தினமாகும்; என்றான் -.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When Paratan offered him a lion-throne, that great one, seated there,
  2. looked at him and said: “For the dark one to enjoy, in gladness,
  3. wealth that never leaves, with the lady of the great earth
  4. and with the lady of the great flower who is his own, the fitting day for the protective thread is tomorrow.”

What the poem says

Vacittaṉ, seated on the throne Paratan offers him, declares that the auspicious day for tying the protective thread, the start of Irāmaṉ's reign with the Earth goddess and Lakṣmī as his consorts, is tomorrow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ariyaṇai parataṉ īya, ataṉkaṇ āṇṭu irunta antap
periyavaṉ, avaṉai nōkki, ‘peru nilak kiḻattiyōṭum
uriya mā malarāḷōṭum ukantaṉar oruvu il celvam
kariyavaṉ uyttaṟku otta kāppu nāḷ nāḷai ‘eṉṟāṉ.