கம்பராமாயணம் 10395 · யுத்த 38.25

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இந்திரன் குருவும், அன்னாற்கு ஏய்ந்தவர் எனவும், நின்ற
மந்திர விதியினாரும், வசிட்டனும், வரைந்து விட்டார்,
சந்திர கவிகை ஓங்கும் தயரத ராமன் தாமச்
சுந்தர மவுலி சூடும் ஓரையும் நாளும், தூக்கி.

பொருள் · Meaning in Tamil

இந்திர குருவும் அன்னார் - தேவ குரு வியாழனை நிகர்த்தவராய், எனையவர் என்ன நின்ற - எத்துணைப் பேர் எனக் கருதுமாறு பலராக நின்ற; மந்திர விதியினாரும் - மந்திர விதிகளில் தேர்ந்தவரும்; வசிட்டனும் - மாமுனி வசிட்டரும்; சந்திர கவிகை ஓங்கும் - நிலவென ஒளிரும் வெண்கொற்றக் குடை உயர்த்திய; தயரதராமன் - தசரத ராமனுக்கு; தாமம் - ஒளிமிக்கதும்; சுந்தரம் - அழகு வாய்ந்ததுமான; மவுலி சூடும் - திருமுடி சூடுகின்ற; ஓரையும் நாளும் தூக்கி - நல்வேளையையும் நாளையும் ஆராய்ந்து;

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The masters of mantra rules, standing there in numbers past counting,
  2. each like the guru of Intiraṉ, and Vacittaṉ, fixed it in writing,
  3. weighing the hour and the day on which Tacarata Irāmaṉ,
  4. under his raised moon-white parasol, would wear the radiant, beautiful crown.

What the poem says

Vacittaṉ and a crowd of learned priests, each as wise as Bṛhaspati, guru of the gods, carefully calculate and write down the auspicious day and moment at which Irāmaṉ, son of Tacarataṉ, will be crowned.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1intira kuruvum, aṉṉār eṉaiyavar eṉṉa, niṉṟa
mantira vitiyiṉārum, vaciṭṭaṉum, varaintu viṭṭār,
cantira kavikai ōṅkum tayarata rāmaṉ tāmac
cuntara mavuli cūṭum ōraiyum nāḷum, tūkki.