கம்பராமாயணம் 10396 · யுத்த 38.26

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1.அடுக்கிய உலகம் மூன்றும் ஆதரத் தூதர் கூற,
இடுக்கு ஒருபேரும் இன்றி அயோத்திவந்து இறுத்தது என்றால்,
தொடுக்குறு கவியான் மற்றைத் துழனியை இறுதி தோன்ற
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான்முகத்து ஒருவற்கு உண்டோ?

பொருள் · Meaning in Tamil

அடுக்கிய உலகம் மூன்றும் - ஒன்றன் மேல் ஒன்றாகத் திகழும் மூன்று உலகங்களிலும்; ஆதரத் தூதர் - ஆர்வம் மிக்க தூதர்கள்; கூற - (திருமுடி சூட்டு நிகழ்ச்சியை) எடுத்துச் சொல்ல; இடுக்கு ஒரு பேருமின்றி - சிற்றிடம் கூட வெற்றிடமாக இல்லாமல்; அயோத்தி வந்து இறுத்தார் என்றால் - (அத்துணைப் பேரும்); அயோத்தியில் வந்து தங்கினார்கள் எனில், மற்றை - வேறு; துழனியை - பேரொலியை; இறுதி தோன்ற - முடிவாக; ஒடுக்குறுத்து - தொகுத்து; தொடுக்குறு கவியான் - புனைகின்ற கவியால்; உரைக்கும் தன்மை - எடுத்துரைக்கும் ஆற்றல்; நான் முகத்து ஒருவற்கு உண்டோ - பிரம தேவனுக்கும் இருக்குமோ? (இராது என்றபடி.)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When eager messengers told the three tiered worlds,
  2. and they all came and settled in Ayōttī, leaving not a single gap,
  3. could even the Four-faced One, in verses he might compose,
  4. sum up the rest of that clamour and bring it to an end?

What the poem says

Messengers carry the news through the three worlds, and so many beings pour into Ayōttī that not the smallest space is left. The poet says not even Brahmā, the four-faced creator, could describe the tumult in verse to the end, let alone a human poet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1.aṭukkiya ulakam mūṉṟum ātarat tūtar kūṟa,
iṭukku oru pērum iṉṟi ayōtti vantu iṟuttār eṉṟāl,
toṭukkuṟu kaviyāṉ maṟṟait tuḻaṉiyai iṟuti tōṉṟa
oṭukkuṟuttu uraikkum taṉmai nāṉmukattu oruvaṟku uṇṭō?