கம்பராமாயணம் 10397 · யுத்த 38.27

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அவ்வயின் முனிவனோடும் பரதனும், அரியின் வேந்தும்
செவ்வியல் நிருதர் கோனும், சாம்பனும், வாலி சேயும்,
எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும், எழுந்து சென்று ஆங்கு
அவ்வியம் அவித்த சிந்தை அண்ணலைத் தொழுது சொன்னார்

பொருள் · Meaning in Tamil

அவ்வயின் - அப்பொழுது; முனிவனோடும் - வசிட்ட முனிவனோடு; அரியின் சேயும் - சூரியன் புதல்வன் சுக்கிரீவனும்; செவ்வியின் நிருதர் கோனும் - செம்மை மிக்க அரக்கர் தலைவன் வீடணனும்; சாம்பனும் - சாம்பவந்தனும்; வாலிசேயும் - வாலியின் புதல்வன் அங்கதனும்; எவ்வம் இல் ஆற்றல் வீரர் - குற்றமற்ற வல்லமைமிக்க வீரர்கள்; யாவரும் - அனைவரும்; ஆங்கு - அவ்விடத்தில்; அவ்வியம் அவித்த சிந்தை - பொறாமை அகற்றிய உள்ளம் படைத்த; அண்ணலை - இராமபிரானை: தொழுது சொன்னார் - வணங்கி (முடிசூட்டு நாள் குறித்துக்) கூறினர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then, with the sage, Paratan, the son of the Sun,
  2. the upright king of the Nirutar, Cāmpaṉ, the son of Vālī,
  3. and all the heroes of flawless strength rose and went there,
  4. bowed to the noble one whose mind has quenched all envy, and spoke.

What the poem says

Vacittaṉ, Paratan, Cukkirīvaṉ, Vīṭaṇaṉ, Cāmpaṉ, Aṅkataṉ and the other heroes go together to Irāmaṉ, whose mind is free of all envy, to tell him the date set for the coronation.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1av vayiṉ muṉivaṉōṭum parataṉum, ariyiṉ cēyum
cevviyiṉ nirutarkōṉum, cāmpaṉum, vāli cēyum,
evvam il āṟṟal vīrar yāvarum, eḻuntu ceṉṟu āṅku
avviyam avitta cintai aṇṇalait toḻutu coṉṉār