கம்பராமாயணம் 1040 · பால 17.5

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தயங்கு தாரகை புரை தரள நீழலும்,
இயங்கு தார் மிடைந்த கார் எழினிச் சூழலும்,
கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும்,
வயங்கு பூ பந்தர் உம், மகளிர் எய்தினார்.

பொருள் · Meaning in Tamil

தயங்கு தாரகை புரை தரள நீழலும் - ஒளிர்கின்ற விண்மீன்களைப் போன்ற முத்துப் பந்தலின் நிழலிலும்; இயங்குகார் மிடைந்த கா எழினிச் சூழலும் - வானில் இயங்கும் மேகம் நெருங்கித் தங்குகின்ற சோலைகளில் திரைச் சேலைகளிட்ட இடங்களிலும்; கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும் - குளங்கள் போல ஒளிர்கின்ற பளிங்கறைகள் பொருந்திய தோட்டங்களிலும்; வயங்கு பூம்பந்தரும் மகளிர் எய்தினர் - (மணம்) விளங்கும் மலர்ப்பந்தல்களிலும் பெண்டிர் சென்று அடைந்தனர்.

முத்துப் பந்தல், திரைப்பந்தல், பளிங்கறை, மலர்ப்பந்தல், ஆகியவற்றின் குளிர் நிழல்களில் மெல்லியல் மகளிர் தங்கினர் எனச் செல்வ வளமும், அவர்தம் மென்மைப் பாங்கும் ஒருங்கு சுட்டினார். கரிய திரைகளை நாற்புறமும் சூழவிட்டு அவற்றின் மேல் மாலைகளைத் தொங்கவிட்டுப் பாடி வீடு அமைக்கும் வழக்கம் ஆதலின் தார்மிடைந்த எனப் பாடங்கொண்டு “இயங்கு தார்மிடைந்த கா எழினிச் சூழலும்” என்றார் எனினுமாம். எழினி: திரை. தார்: மாலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the shade of pearl canopies like the glittering stars,
  2. in curtained bowers in groves where drifting clouds crowd close,
  3. in gardens set with crystal halls that shine like pools,
  4. and in bright pavilions of flowers, the women gathered.

What the poem says

As night falls over the camp, the women settle into their quarters: canopies hung with pearls like stars, curtained enclosures among the trees, gardens with crystal pavilions that gleam like water, and bowers roofed with flowers.

The list shows how rich the royal camp is and how delicate the women are. One reading has garlands, not clouds, hanging over the dark curtained tents, as was the custom in camps.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tayaṅku tārakai purai taraḷa nīḻalum,
iyaṅku kār miṭainta kā eḻiṉic cūḻalum,
kayaṅkaḷ pōṉṟu oḷir paḷiṅku aṭutta kāṉamum,
vayaṅku pūm pantarum, makaḷir eytiṉār.