கம்பராமாயணம் 1041 · பால 17.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பூக்கமழ் ஓதியர் - பூக்களின் நறுமணம் கமழ்கின்ற கூந்தலையுடைய பெண்டிர்; போது போக்கிய சேக்கையின் விளைசெரு - மலர்கள் (மிகப்) பரப்பிய படுக்கைகளிலே விளைகின்ற கலவிப் போரிலே; செருக்கும் சிந்தையர் - களிக்க வேண்டுமென்ற மனத்தினராய்; ஆக்கிய அமிழ்தென - அப்போரில் வெல்வதற்கென ஆக்கப்பட்ட அமிழ்தம் போல; அம்பொன் வள்ளத்து வாக்கிய பசு நறை - அழகிய பொற்கிண்ணத்தில் ஊற்றிய புதுமதுவை; மாந்தல் மேயினார் - பருகத் தொடங்கினர்.
சோர்வு, களைப்பு ஆகியவை போக்கி, இறப்பு நீக்கி, இளமை நல்க வல்லது அமிழ்து ஆதலின், கலவிப் போர்க்கு இவை செய்யும் அமிழ்தென்று மதுவுண்டனர் என்க. போது போக்கிய: மலர்கள் போடப்பட்ட, பொழுது போக்குவதற்காக. சிலேடை. அவனிப் போருக்கு ஆக்கிய மது அன்று இது; அமளிப் போருக்கு என்றே ஆக்கிய அமிழ்தம் இது என்பார் “சேக்கையின் விளை செருச் செருக்கும் சிந்தையர் ஆக்கிய அமிழ்தென” என்றார். சேக்கை: படுக்கை, அமளி. செரு: போர். வாக்கிய: வார்த்த. செம்பொன் வள்ளம் வளம் மிகுதி குறித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The women with flower-scented tresses, their hearts eager to exult
- in the battle that is waged on beds strewn with blossoms,
- began to drink, as though it were nectar prepared for that fight,
- the fresh wine poured into lovely golden cups.
What the poem says
The women of the camp begin to drink. Their minds are on the night ahead and the "battle" of love on beds strewn with flowers. They take the new wine from golden cups as though it were nectar, the drink of the gods that drives off weariness and keeps one young.
There is a pun in the phrase for the flower-strewn bed, which can also mean a bed for passing the time. The wine is brewed not for war on the battlefield but for war in bed.