கம்பராமாயணம் 1042 · பால 17.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மீன் உடை விசும்பினார் - விண்மீன்களையுடைய வானுலக மங்கையரும்; விஞ்சை நாட்டவர் - வித்தியாதர உலகத்து வித்தியாதர மகளிரும்; ஊனுடை உடம்பினார் - ஊன் உடம்பினராகி இம் மகளிர்க்கு; உருவம் ஒப்பிலார் - அழகில் ஒப்பாகார் (எனத் தக்க); மானுடை நோக்கினார் - மானை வென்ற விழியினராகிய மங்கையர்; தேனுடை மலரிடை - தேனையுடைய மலரின் கண்ணே; தேன் பெய்தென்ன - (மேலும்) தேனைச் சொரிந்தாற் போல; வாயில் மாந்தினர் - (தங்கள் மலர்) வாயால் மதுவுண்டனர்.
மகளிர் வாய், மலர் போன்றும், அதில் ஊறும் நீர் தேன் போன்றும் இருத்தலால், அவர்கள் மேலும் தேன் எனப்படும் மதுவையுண்ணுதல் “தேனுடை மலரிடை தேன் பெய்ததற்கு” நிகர் ஆயிற்று. வால் எயிற்று ஊறிய நீர் தேன் என வள்ளுவரும் உரைப்பார் (திருக். 1121). விண்ணக மகளிரும் வித்தியாதர மகளிரும் ஒளிமேனிப் படைத்தவர் ஆயினும், ஊன்மேனி படைத்த இவ்வுலகப் பெண்களுக்கு ஒப்பாகார். அவர்கள் இமையா நாட்டம் பெற்றவர் ஆயினும் இமைத்து மருட்டும் இம்மடந்தையர்க்கு ஈடாகார் என்பார் “மான் உடை நோக்கினார்” என்ற நுட்பம்
ஆங்கிலம் · English translationAI
Translation
- The women of the starry heavens and of the land of the Viñcaiyar
- could not match in beauty these women whose bodies were of flesh;
- and these doe-eyed women drank the wine with their mouths,
- as if honey were being poured into a flower already full of honey.
What the poem says
The women of Ayōttī are mortal, with bodies of flesh, yet neither the goddesses of heaven nor the women of the Viñcaiyar, a race of celestial beings, can equal them in beauty. Heavenly women never blink, but these women's blinking, doe-like eyes are more bewitching.
Their mouths are like flowers, and the moisture of their lips is already called honey, as in the Tirukkuṟaḷ. So when they drink the wine, also called honey, it is like pouring honey into a flower that is already full of it.