கம்பராமாயணம் 10400 · யுத்த 38.30

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சூழ்கடல் நான்கின் தோயம் எழுவகைத்தாகச் சொன்ன
ஆழ்திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று ‘என்ன, ஆம் என்று,
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி, அன்றே
ஏழ்கடல் நீரும் தந்தான், இருந்து உய்ய மருந்து தந்தான்.

பொருள் · Meaning in Tamil

கடல் நான்கின் தோயம் - நான்கு கடல்களின் நீரும்; எழுவகை ஆகச் சொன்ன - எழு வகையாகக் கூறப்பட்ட; ஆழ் திரை - ஆழ்ந்த அலை கொண்ட கடல் நீரும்; ஆற்றின் நீரோடு - ஆறுகளின் நீரோடு; அமைத்தி - கொண்டு வந்து சேர்க்க; என்ன - என்று (சுக்கிரீவன் ஆணையிட), இருந்து உய்ய மருந்து தந்தான் - நெடிது வாழச் சஞ்சீவி மலை மருந்து தந்தவனாகிய அனுமனும்; ஆம் என - அப்படியே செய்வேன் என்று; ஊழியின் இறுதி செல்லும் - யுக முடிவில் எழுகின்ற; தாதையின் உலாவி - சண்ட மாருதம் போல் எழுந்து சென்று; ஒன்றா - ஒரே சமயத்தில்; ஏழ்கடல் நீரும் தந்தான் - எழுகடல் நீரையும் கொணர்ந்து தந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “The water of the four surrounding seas, and of the deep-waved ones
  2. counted as seven, together with the water of the rivers, gather it today,” he was told; saying “Yes,”
  3. ranging like his father who blows at the end of the age, all at once
  4. he brought the water of the seven seas — he who had brought the medicine by which they lived.

What the poem says

Cukkirīvaṉ asks Aṉumaṉ to gather water from all the seas and rivers that same day. Aṉumaṉ, who earlier brought the healing herbs that revived the army, agrees, sweeps across the world like his father the Wind in the storm at the end of an age, and returns at once with water from all seven seas.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūḻ kaṭal nāṉkiṉ tōyam eḻu vakai ākac coṉṉa
āḻ tirai āṟṟiṉ nīrōṭu amaitti iṉṟu ‘eṉṉa, ām eṉṟu,
ūḻiyiṉ iṟuti cellum tātaiyiṉ ulāvi, oṉṟā
ēḻ kaṭal nīrum tantāṉ, iruntu uyya maruntu tantāṉ.