கம்பராமாயணம் 10402 · யுத்த 38.32

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாணிக்கப் பலகை தைத்து, வயிரத்தின் கால்கள் சேர்த்தி,
ஆணிப் பொன் சுற்று முற்றி அழகு உறச் சமைத்த பீடம்
ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர்; அதனின் மீது
பூண் உற்ற திரள்தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ.

பொருள் · Meaning in Tamil

மாணிக்கப் பலகை தைத்து - மாணிக்கத்தால் செய்த பலகை பொருத்தப் பெற்று; வயிரத்தின் கால்கள் சேர்த்தி - வைரத்தால் வலிய கால்கள் செய்தமைத்து; ஆணிப்பொன் சுற்றிமுற்றி - உயர்ந்த பொன்னால் சுற்றும் பூர்த்தி செய்யப் பட்டு; அழகுறச் சமைத்த பீடம் - எழிலாக உருவாக்கிய பீடத்தை; ஏண் உற்ற - பெருமை சான்ற; பளிக்கு மாடத்து - பளிங்கு மாடத்தில்; இட்டனர் - அமைத்தனர்; அதனின் மீது - அப்பீடத்தின் மேல், பூண் உற்ற - அணிகலன் அணிந்த; திரள் தோள் வீரன் - திரண்ட தோள்களை உடைய வீரனாகிய இராமபிரான்; திருவொடும் பொலிந்தான் - சீதா பிராட்டியோடும் அழகுற வீற்றிருந்தான். மன் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A seat set with planks of ruby, joined to legs of diamond,
  2. bound all round with the finest gold and beautifully made,
  3. they placed in the glorious crystal hall; and upon it
  4. the hero of rounded, ornamented shoulders shone with Tiru beside him.

What the poem says

A throne made of rubies, with diamond legs and bands of the purest gold, is set in the crystal hall, and Irāmaṉ, adorned with jewels, sits on it in splendour beside Cītai, who is Tiru (Lakṣmī) herself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṇikkap palakai taittu, vayirattiṉ kālkaḷ cērtti,
āṇippoṉ cuṟṟi muṟṟi aḻakuṟac camaitta pīṭam
ēṇ uṟṟa paḷikku māṭattu iṭṭaṉar; ataṉiṉmītu
pūṇ uṟṟa tiraḷ tōḷ vīraṉ tiruvoṭum polintāṉ maṉṉō.