கம்பராமாயணம் 10406 · யுத்த 38.36

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மரகதச் சயிலம் செந்தாமரை மலர்க் காடு பூத்து,
திரைகெழு கங்கை வீசும் திவலையான் நனைந்து, செய்ய
இருகுழை தொடரும் வேற்கண் மயிலொடும் இருந்தது ஏய்ப்ப,
பெருகிய செவ்வி கண்டார், பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார்.

பொருள் · Meaning in Tamil

மரகதச் சயிலம் - மரகத மலை; செந்தாமரை மலர்க்காடு பூத்து - செந்தாமரை மலர்த் தொகுதி மலரப் பெற்று; திரைகெழு கங்கை - அலைகள் செறிந்த கங்கை நதியின்; வீசும் திவலையால் நனைந்து - வீசுகின்ற துளிகளால் ஈரமுற்று; செய்ய - சிவந்த; இருகுழை தொடரும் - இரு செவிக் குழைகளையும் தொட்டு மீளும்; வேற்கண் - வேல் விழி கொண்ட; மயிலொடும் இருந்தது ஏய்ப்ப - ஒரு மயிலோடு விளங்கியது போன்று; பெருகிய செவ்வி கண்டார் - விரியும் அழகினைக் கண்டவர்கள்; பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார் - பிறப்பு என்ற நோய் தீரப்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if an emerald mountain, blooming with a forest of red lotuses
  2. and wet with the spray flung by the wave-filled Kaṅkai,
  3. were sitting beside a peahen whose spear-like eyes reach to her two red earrings —
  4. those who saw that swelling beauty were freed from the disease called birth.

What the poem says

Irāmaṉ, dark green-blue and dripping with the sacred waters, his eyes, hands and feet like red lotuses, looks like an emerald mountain covered in lotus blooms and wet with spray from the Gaṅgā. Cītai beside him is like a peahen with long eyes reaching to her earrings. Whoever saw this sight was released from the cycle of rebirth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1marakatac cayilam cen tāmarai malark kāṭu pūttu,
tirai keḻu kaṅkai vīcum tivalaiyāl naṉaintu, ceyya
iru kuḻai toṭarum vēṟ kaṇ mayiloṭum iruntatu ēyppa,
perukiya cevvi kaṇṭār, piṟappu eṉum piṇikaḷ tīrntār.