கம்பராமாயணம் 10408 · யுத்த 38.38

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.

பொருள் · Meaning in Tamil

அரி அணை அனுமன் தாங்க - சிங்காதனத்தை அனுமன் காத்து நிற்கவும்; அங்கதன் உடைவாள் ஏந்த - அங்கதன் உடை வாளை ஏந்தி நிற்கவும்; பரதன் வெண்குடை கவிக்க - வெண் கொற்றக் குடையைப் பரதன் பிடித்து நிழற்றவும்; இருவரும் கவரி பற்ற - இலக்குவ சத்துருக்கர் இருவரும் சாமரை ஏந்தவும்; விரைசெறி - மணம் கமழ்கிற, குழலி ஓங்க - கூந்தலை உடைய பிராட்டி பெருமிதமாய் விளங்கவும்; வெண்ணெயூர்ச் சடையன் - திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல், தங்கள் மரபுளோர் - கால் வழியின் முன்னோராக உள்ளோர்; கொடுக்க வாங்கி - கொடுக்கப் பெற்றுக்கொண்டு; மௌலி - மகுடத்தை; வசிட்டனே புனைந்தான் - வசிட்ட முனிவனே சூட்டினான்.

கம்ப நாடர் இப்பாடலில் தன்னை வாழ்வித்த சடையப்ப வள்ளலுக்கு எந்நாளும் அழியாத நன்றி மகுடம் சூட்டியுள்ளார். மன்னர்க்கு முடி கவிக்கும் உரிமை வேளாளருக்கு இருந்ததைச் சோழ நாட்டு வரலாறு கூறும். அத் தமிழ் மரபை இங்கு இணைத்து மகிழ்கிறார் கம்ப நாடர்.

வசிட்டனே என்று தேற்றேகாரம் அமைந்தமைக்குக் காரணம், முன்னம் வசிட்டன் திட்டமிட்ட பட்டாபிடேகம் நிறைவேறாது போக, இன்று தானே மீண்டும் முடிசூட்டினான் என்பதை உணர்த்தவே ஆகும். இனி மகாவித்துவான் மயிலம் வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து வருமாறு.

பதினான்கு ஆண்டுகள் இராமபிரான் வனவாசம் செய்ததனால் பெற்ற பேறு அனுமனும் அங்கதனும் ஆதலின் அவர்களைப் பரதன் முதலோனோர்க்கு முன் இம்முடி சூட்டும் பாடலில் கூறினார் கம்பர். இராமனையும் இலக்குவனையும் பரதனையும் பிராட்டியையும் மீட்டுத் தந்த பெருமை அனுமனுக்கே உரியதாதலின் அவனே அரியணை நிலைத்தற்கும் உரியவன் என்னும் கருத்தினால் அவனை முதற்கண் அரியணை அனுமன் தாங்க' என்றார் இதனை கம்ப. 4/43 ஆம் பாடல் கொண்டும் அறிக. முன்பு அங்கதனுக்கு அடைக்கலம் அளித்த போது "பொன்னுடை வாளை நீட்டி நீ இது பொறுத்தி" (கம்ப. 4093) என்றதனை நினைப்பிற் கொண்டு அங்கதன் உடைவாள் ஏந்த' என்று கூறினார். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் முடிசூட்டு விழா நடந்திருக்குமானால் இவ்விருவரையும் ஆண்டுக் காணமுடியாதன்றோ என்பதனை நினையுங்கால் இப்பாடலின் சிறப்பும் வரிசைமுறையும் அழகும் புலனாகும் என்பது. இராமபிரானது வனவாசமாகிய முதலுக்குக் கிடைத்த வட்டி அனுமனும் அங்கதனும் என்பர் வாகீசகலாநிதி க. வா. ஜகந்நாதன் அவர்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With Aṉumaṉ supporting the lion-throne, Aṅkataṉ holding the sword,
  2. Paratan holding the white parasol over him, the two brothers holding the whisks,
  3. and the lady of fragrant tresses standing tall in glory, the crown was handed over by those of the line
  4. of Caṭaiyaṉ of Veṇṇeyūr, and Vacittaṉ himself received it and placed it on his head.

What the poem says

The climax of the coronation. Aṉumaṉ upholds the throne, Aṅkataṉ bears the royal sword, Paratan holds the white parasol, Ilakkuvaṉ and Catturukkaṉ wave the whisks, and Vacittaṉ himself places the crown on Irāmaṉ's head. The crown is handed to him by the ancestors of Caṭaiyappa Vaḷḷal of Tiruveṇṇeynallūr, Kampaṉ's patron. In the Chola country, landholding families had the hereditary right to crown kings, and the poet uses it to pay his patron an undying tribute.

The emphasis on Vacittaṉ "himself" recalls that the coronation he arranged fourteen years earlier never took place. Aṉumaṉ and Aṅkataṉ are named first, as the gains of the exile: had Irāmaṉ been crowned then, these two would not have been present.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ariyaṇai aṉumaṉ tāṅka, aṅkataṉ uṭai vāḷ ēnta,
parataṉ veṇ kuṭai kavikka, iruvarum kavari paṟṟa
virai ceṟi kuḻali ōṅka veṇṇeyūrc caṭaiyaṉ taṅkaḷ
marapuḷōr koṭukka vāṅki vaciṭṭaṉē puṉaintāṉ mauli.