கம்பராமாயணம் 10409 · யுத்த 38.39

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெள்ளியும் பொன்னும் என்பார் விதிமுறை மெய்யின் கொண்ட
ஒள்ளிய நாளின் நல்ல ஓரையின், உலகம் மூன்றும்
துள்ளின குனிப்ப, மௌலி சூடினான் கடலின் வந்த
தெள்ளிய திருவும், தெய்வப் பூமியும், சேரும் தோளான்.

பொருள் · Meaning in Tamil

கடலின் வந்த - திருப்பாற் கடலில் தோன்றிய; தெள்ளிய திருவும் - தெளிந்த அழகுடைய இலக்குமியும்; தெய்வப் பூமியும் - தெய்வத் தன்மை மிக்க பூமிப் பிராட்டியும்; சேரும் - அணைகின்ற; தோளான் - தோளை உடையவனாகிய இராமபிரான்; கொண்ட ஒள்ளிய நாளின் - தேர்ந்தெடுத்த சிறந்த நன்னாளில்; நல்ல ஓரையின் - சிறந்த நல் வேளையில்; உலகம் மூன்றும் துள்ளின குனிப்ப - மூன்று உலகமும் மகிழ்ச்சி நிரம்பியவாறு வணங்க; வெள்ளியும் பொன்னும் ஒப்பார் - அசுர குரு சுக்கிரனும், தேவ குரு வியாழனும் போன்ற நல்லோர்; விதி முறை - விதித்த முறைப்படியே; மௌலி - மகுடத்தை; மெய்யின் சூடினன் - தலையில் சூடிக் கொண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the bright day chosen truly and by due rule by those who were like Venus and Jupiter,
  2. at the good hour, while all three worlds
  3. leapt and danced for joy, he wore the crown —
  4. he whose shoulders are embraced by clear Tiru who came from the ocean, and by the divine Earth.

What the poem says

Irāmaṉ is crowned at the hour fixed by sages as wise as Śukra (Venus) and Bṛhaspati (Jupiter), the gurus of the demons and the gods, while the three worlds rejoice. As Viṣṇu he is the husband of both Lakṣmī, born from the churning of the milk ocean, and the Earth goddess.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veḷḷiyum poṉṉum oppār viti muṟai meyyiṉ koṇṭa
oḷḷiya nāḷiṉ nalla ōraiyiṉ, ulakam mūṉṟum
tuḷḷiṉa kuṉippa, mōli cūṭiṉaṉ kaṭaliṉ vanta
teḷḷiya tiruvum, teyvap pūmiyum, cērum tōḷāṉ.