கம்பராமாயணம் 10412 · யுத்த 38.42

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விரத நூல் முனிவன் - விரதம் வழுவாத வேதம் வல்ல வசிட்ட முனிவன்; சொன்ன - சொல்லிய; விதிநெறி - விதி முறைகள்; வழாமை நோக்கி - தவறாது காத்து; வரதனும் - அருளாளனாகிய இராமபிரானும்; இளைஞற்கு - தன் தம்பிமார் மூவர்க்கும்; மாமணி மகுடம் சூட்டி - மாணிக்கம் இழைத்த உயர்ந்த மகுடம் அணிவித்து; பரதனை - பரத நம்பியை; தனது செங்கோல் நடாவுறப் பணித்து - தன் செங்கோலாட்சி நடத்துமாறு கட்டளையிட்டு; நாளும் - நாள்தோறும்; கரை தெரிவிலாத போகக் களிப்பினுள் இருந்தான் - எல்லையற்ற இன்ப மகிழ்ச்சியில் திளைத்திருந்தான்.

மாபெரும் சோதனைகள் தாண்டி உலகத்து உயிர்களெல்லாம் உவகை பூக்க இராமபிரான் சீதா பிராட்டியோடும் மணி மகுடம் சூடினான். பின்னர் ஒரு முன்னுதாரணம் காட்டுவானாய்த் தம்பியர்க்கும் பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தான். பரத நம்பிக்கு ஆட்சிப் பங்களித்தான். மெய்யாகவே இராமராச்சியம் என்பது பகிர்ந்தாளும் பண்பாடு உடையது என்று மெய்ப்பித்தான் இராமபிரான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Taking care not to stray from the rule laid down by the sage of the scriptures of vows,
  2. the giver of boons then set a great jewelled crown on the younger prince there,
  3. commanded Paratan to wield his sceptre of justice, and day after day
  4. he lived in a joy of delights that knew no shore.

What the poem says

Following Vacittaṉ's rites to the letter, Irāmaṉ crowns his younger brother as heir and entrusts Paratan with the actual running of the kingdom under his own righteous sceptre. He then lives in boundless happiness. Sharing the burdens of rule with his brothers is shown as the mark of Rāma's reign. This verse ends the Coronation chapter.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1virata nūl muṉivaṉ coṉṉa viti neṟi vaḻāmai nōkki,
varataṉum iḷaiñaṟku āṅkaṇ mā maṇi makuṭam cūṭṭi,
parataṉait taṉatu ceṅkōl naṭāvuṟap paṇittu, nāḷum
karai terivu ilāta pōkak kaḷippiṉuḷ iruntāṉ maṉṉō.